DNA Atharva: விஜய், அஜித்தே செய்யாத விஷயம்... அதர்வா மட்டும் செய்யணுமா?

By :  SANKARAN
Published On 2025-06-23 14:46 IST   |   Updated On 2025-06-23 14:46:00 IST

கடந்த வாரம் அதர்வாவின் டிஎன்ஏ படம் வெளியானது. படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இருந்தும் வசூல் தான் பெரிய அளவில் வரவில்லை. இது என்ன காரணம் என்றே தெரியவில்லை. புரியாத புதிராக உள்ளது. இந்தப் படத்தோடு வெளியான தனுஷின் குபேரா படத்திற்கு நல்ல வசூல். அந்த வகையில் டிஎன்ஏ மற்றும் அதர்வா குறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

டிஎன்ஏ ரொம்ப நல்ல கருத்துள்ள படம். அது கொஞ்சம் டீட்டெய்லாத் தான் பண்ணிருக்காங்க. எப்படி ஒரு ஆஸ்பிட்டல்ல இருந்து குழந்தை போகுது. இன்னொரு குழந்தை உள்ளே வருது? குழந்தையை எப்படி மாத்தி வைக்கிறாங்க? அதுல பணம் எப்படி விளையாடுது? ஜோதிட நம்பிக்கை எல்லாம் எப்படி அதுக்குள்ள வருது?

அப்படின்னு ரொம்ப டீட்டெய்லடா பண்ணிருக்காங்க. முழுக்க முழுக்க ஒரு யதார்த்தமான படமா இருந்தா நல்லா இருந்துருக்கும். சினிமாவுக்காகக் கொஞ்சம் மாத்திருக்காங்க. படம் விறுவிறுப்பா போய்க்கிட்டு இருக்கு. ஒரு ஐட்டம் டான்ஸைக் கொண்டு வாராங்க.


நமக்கு என்னய்யா இது? படமே வேகமா போய்க்கிட்டு இருக்கு. இப்போ எதுக்கு பாட்டுன்னு கோபம் வருது. கதையோட மையக்கருவுக்காகப் பாராட்டலாம் என்கிறார் அந்தனன். தொடர்ந்து எப்போ அதர்வா பாலாவோ பரதேசி படத்துல நடிச்சாரோ அதுக்கு அப்புறம் ஒரே தோற்றமாவே வர்றாரு. அடுத்த அப்டேட்டை எப்போ பார்க்கலாம்னு ஒரு யூடியூப் சேனலில் ஆங்கர் கேள்வி கேட்கிறார். அதற்கு அந்தனன் சொன்ன பதில் இதுதான்.

தோற்றத்தை மாற்றி வைத்துத் தான் ஜெயிக்கணும்னு கிடையாது. விஜய், அஜித் எல்லாம் எத்தனை படத்துல தோற்றத்தை மாற்றிக்கிட்டாரு? அஜித் எல்லாம் மேக்கப்பே போடமாட்டாரு. அப்படியே வந்து நிக்கிறாரு. அதைத்தாண்டி 7 கெட்டப், 8 கெட்டப் எல்லாம் தேவையில்லை. கன்டன்ட் நல்லா இருந்தா போதும் படம் ஓடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News