கீர்த்தி சுரேஷுக்கு போவ.. விஜயகாந்துக்கு வர மாட்டியா?!. விஜயை போட்டு பொளக்கும் ரசிகர்கள்...
Vijay Vijayakanth: நடிகர் விஜய் கலகலப்பாக பேசும் சுபாவம் கொண்டவர் கிடையாது. அவரின் நட்பு வட்டாரம் கூட மிகவும் சிறியது. நேரம் கிடைக்கும்போது அந்த 4 நண்பர்களோடு கொஞ்ச நேரம் செலவழிப்பார். மற்றபடி ஷூட்டிங் போனால் 6 மணிக்கு வீட்டுக்கு போய் விடுவார். எதைப்பற்றியும் யாரிடமும் பேச மாட்டார். எப்போதும் மிகவும் அமைதியாகவே இருப்பார்.
படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் ஜாலியாக இருக்க மாட்டார். நடித்து முடித்ததும் கேரவானுக்குள் போய்விடுவார். படப்பிடிப்பு குழுவினரிடம் கூட அதிகம் பேச மாட்டார். இதுதான் அவரின் சுபாவமும் கூட. விஜயின் இந்த சுபாவத்தை பலரும் விமர்சித்திருக்கிறார்கள். அவருடன் நடித்த நடிகைகளே பேட்டிகளில் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், விஜய் மாறவும் இல்லை. இதுபற்றி விளக்கம் சொன்னதும் இல்லை.
கேட்டால் ‘கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும், உசுப்பேத்தறவன்கிட்ட உம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்’ என தத்துவம் சொல்லுவார். விஜய்க்கு டிவிட்டரில் அக்கவுண்ட் இருக்கிறது. அதில், அவர் நடிக்கும் புதிய படம் தொடர்பான முக்கிய அப்டேட் மட்டுமே பதிவிடப்படும்.
நாட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் அதுபற்றி எந்த கருத்தும் சொல்லமாட்டார். அப்படிப்பட்ட விஜய்க்கு அரசியலில் சாதிக்கும் ஆசை வந்திருக்கிறது. தனியாக கட்சி துவங்கி மாநாட்டையும் நடத்தி முடித்துவிட்டார். அந்த மாநாட்டில் மட்டும் கொஞ்சம் அதிகமாக பேசி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
ஆனால், அரசியலுக்கு வந்த பின்னரும் விஜய் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. சில நாட்களுக்கு முன்பு கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் மழை வெள்ளம் வந்து மக்கள் பாதிக்கப்பட்ட போது விஜய் நேரில் போய் மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட சிலரை தனது பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரண உதவிகளை செய்தார். இது அப்போது கடும் விமர்சனத்துக்கு ஆளானது. ‘நான் அங்கு சென்றால் கூட்டம் கூடும்’ என சொல்லி சப்பை கட்டு கட்டினார் விஜய்.
மழைக்கு போகாத விஜய் சில நாட்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்காக திரிஷாவை அழைத்துக்கொண்டு தனி விமானம் மூலம் கோவாவுக்கு போனார். மக்கள் பிரச்சனைக்கு போகாத விஜய் கீர்த்தி சுரேஷ் கல்யாணத்து மட்டும் போகிறார் என அப்போது அவரை பலரும் ட்ரோல் செய்தார்கள். ஆனால், விஜய் வழக்கம்போல் மௌனமாகவே இருந்தார்.
இந்நிலையில், விஜயகாந்த் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் டிசம்பர் 28ம் தேதியான நேற்று விஜயகாந்த் சமாதி அருகே குரு பூஜை நடந்தது. இதில் கலந்துகொள்ள வேண்டும் என விஜயகாந்தின் மைத்துனர் சதீஷ் மற்றும் மூத்த மகன் விஜய பிரபாகரன் விஜயை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். ஆனால், கேப்டனின் குரு பூஜையில் விஜய் கலந்து கொள்ளவில்லை. அதோடு, விஜயகாந்த் பற்றி தனது சமூகவலைத்தள பக்கங்களிலும் விஜய் எந்த பதிவையும் போடவில்லை. இது ரசிகர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய்க்கு மார்க்கெட்டே இல்லாமல் இருந்தபோது செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து ஹிட் அடிக்க வைத்தார் விஜயகாந்த். இதை எந்த பேட்டிகளிலோ, சினிமா விழாக்களிலோ சொல்லி விஜய் நன்றி சொன்னதே கிடையாது. அதேபோல், சினிமாவில் நடித்து வரும் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை தனது படத்தில் நடிக்க வைத்து விஜயகாந்த் தனக்கு செய்த உதவிக்கு நன்றிக்கடன் செய்திருக்கலாம். அதையும் விஜய் செய்யவில்லை. தற்போது விஜயகாந்தின் குருபூஜைக்கும் அவர் போகவில்லை. இது விஜயகாந்த் ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.