மைக்மோகனுக்கும் எஸ்என்.சுரேந்தருக்கும் என்னதான் பிரச்சனை? இதுல விஜய்க்கு என்ன சம்பந்தம்?
எஸ்என்.சுரேந்தர் மோகனுக்குக் குரல் கொடுத்தவர். அவரது எல்லா படங்களிலும் எஸ்.என்.சுரேந்தர் தான் அவருக்குப் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவர்களுக்குள் பிரிவு வரக் காரணம் என்னன்னா என்னோட குரலால தான் மோகன் படங்கள் ஓடுதுன்னு அவரும், என்னோட நடிப்பால தான் எஸ்என்.சுரேந்தரோட குரல் மின்னுதுன்னு மோகனும் சொல்லிட்டாங்க.
இதுல கருத்து வேறுபாடு வந்து இருவரும் பிரிஞ்சிடறாங்க. அந்த நேரத்துல உருவம்னு மோகனின் படம் வருது. அதுல அவரோட சொந்தக்குரல் எடுபடல. விஷ்ணு படத்துல எஸ்என்.சுரேந்தர் அம்மா அம்மா இது சின்ன பொண்ணுங்கற பாட்டை அவருதான் பாடுனாரு. தன் மருமகன் விஜய் எப்படி நடிக்கிறாருன்னு பார்க்கறதுக்காக அந்தப் படத்தோட சூட்டிங்கிற்கும் வந்தாரு என்கிறார் பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் மூவீஸ் பாலாஜி பிரபு. இவர் இன்னும் என்னவெல்லாம் சொல்கிறாருன்னு பார்க்கலாமா...
மோகனுக்கு தமிழே பேச வராது. அவருக்கு மோகமான குரலை பின்னணியாகக் கொடுத்தவர் எஸ்.என்.சுரேந்தர். மோகனின் குரல் எஸ்என்.சுரேந்தரின் குரல். அப்படித்தான் அடையாளப் படுத்தப்பட்டார். அவரை மைக்ல பேச வச்சா ரொம்ப ரொம்ப சுமாரா இருக்கும். இளையராஜா போட்ட பாடல்களில் எல்லாம் மைக் பிடிச்சி பாட ஆரம்பிச்சாரு. அதனால தான் மைக் மோகன் ஆனாரு.
குரல் கேட்டால் அவரது உருவம் நினைவு வருதுன்னு சொல்றீங்க. ரஜினிக்கு நிறைய பாடல் எஸ்பிபி பாடியிருக்காரு. ஆனா அந்தப் பாட்டைக் கேட்டா எஸ்பிபி உருவமா ஞாபகம் வருது? ரஜினி உருவம்தான ஞாபகம் வருது. அப்போ யாரு மாஸ்? ரஜினி தான் மாஸ்.
குரல் இல்லன்னு சொல்லல. ஆனா மைக் மோகனுக்கு அவரு குரல் மைனஸ். ரஜினி, கமல் எல்லாரும் அவங்களே டப்பிங் பேசுறாங்க. மோகனுக்கு டப்பிங் பேச வராது. இருவருக்கும் கருத்து வேறுபாடு யார் பெரியவர் என்பதில் வருகிறது. அதனால் தான் பிரிஞ்சாங்க.
இதே மாதிரி இளையராஜா, வைரமுத்துவுக்கு இடையே பிரச்சனை வருது. என் மெட்டுக்குத் தான் பாட்டுன்னாரு. என் பாடல் வரியால தான் இளையராஜான்னாரு வைரமுத்து. அப்போ இவர் பாடல் வரிகள் இல்லாம இளையராஜாவோட பாட்டு எல்லாம் ஹிட் ஆகலையா.
அப்படின்னா வைரமுத்து வேற மெட்டுக்குப் பாட்டு எழுதலையா? ஏ.ஆர்.ரகுமான் இசையில. அது ஹிட் ஆகலையா? இப்ப எல்லாரும் தள்ளி வச்சிட்டாங்க. அது வேற விஷயம். இளையராஜாவும், வைரமுத்துவும் 6 வருஷம்தான் இணைஞ்சு செயல்பட்டுருக்காங்க. அந்த வகையில் அற்புதமான பாடல்களை எல்லாம் கொடுத்துருக்காங்க.
வரிகளும், மெட்டுமே ஒரு பாடலுக்கு அவசியம்தான். ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை. மைக் மோகன், எஸ்.என்.சுரேந்தர் இருவருக்கும் மோதல் வரும்போது இருவருக்குமே மார்க்கெட் அவுட் ஆனது. விஜய்க்கு ஆரம்பகாலத்துல எஸ்என்.சுரேந்தர் ஏணின்னு சொன்னீங்க. ஆனா இவரு அவருக்கும் உதவல. அவரு இவருக்கும் உதவல. என்னன்னா பாட்டுகள் வாங்கிக் கொடுத்தாரு. ஒரு பாட்டுக்கு நாலாயிரம், ஐயாயிரம் சம்பளம் வாங்கிக் கொடுத்தாரு அவ்ளோதான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.