விஷாலின் கைநடுக்கத்துக்கு மோசமான பழக்கம்தான் காரணம்.... மதகஜராஜாவுக்கு இருக்கும் சவால்கள்

By :  Sankaran
Update: 2025-01-07 03:30 GMT

மதகஜராஜா பரீ ரிலீஸ் விழாவில் விஷாலைப் பார்க்கும் போது அவருடைய கை மைக்கைப் பிடித்தபடி நடுங்குது. ஏதோ பாதிக்கப்பட்டுருக்காருன்னு தெரிஞ்சது. அவருக்குக் குளிர் ஜூரம்னு சொன்னாங்க. ஆனா அது உண்மையில்லை என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி. இதுகுறித்து இன்னும் என்னவெல்லாம் சொல்றாருன்னு பார்க்கலாமா...

நான் ரொம்ப நாளா சொன்னேன். விஷாலுக்கு மைக்ரைன் பிரச்சனை இருந்தது. அது தீராத, அடக்க முடியாத தலைவலியாக இருந்தது. அதுக்கு ட்ரீட்மெண்ட்லாம் எடுத்துக்கிட்டு இருந்தாரு. அதுமட்டுமல்லாமல் அவருக்கு நிறைய பழக்கங்கள் இருந்தது. அதுதான் இன்னைக்கு இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டுருக்கு.

மதகஜராஜாவைப் பொருத்த வரைக்கும் இது வெளிவர வாய்ப்பே இல்லன்னு நினைச்ச படம்தான். அந்தப் படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட். அவங்க சினிமாவுல பல கோடி முதலீடு பண்ணி, பல செக்டார்ல தொழில் பண்ணிக்கிட்டு இருக்குற நிறுவனம். அவங்க படத்தயாரிப்பு, படவிநியோகம்னு அகலக்கால் வச்சதால கொஞ்சம் கடனானது.

அதனால அந்தத் தயாரிப்பாளர் தற்கொலை பண்ணிக்கிட்டார். அந்த அளவுக்கு சிக்கல் இருந்தது. அதனால தான் அந்தப் படம் ரிலீஸ் ஆகல. சில வருடங்களுக்கு முன்பு விஷால் இந்தப் படத்தை ரிலீஸ் பண்ண முயற்சி செய்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

காரணம் என்னன்னா அந்தப் படத்தின்மீது அவ்வளவு பெரிய தொகை கடனில் இருந்தது. இந்த சூழலில் தான் 12 வருஷம் கழிச்சி அந்தப் படம் ரிலீஸ் ஆகப்போகுது. ரெட்ஜெயண்ட் கையில் அதிகாரம் இருக்கறதால அவங்க பண்ணிருக்காங்க. இந்தப் படத்தின் புரொமோஷனுக்குத்தான் விஷால் அழைக்கப்பட்டு இருக்கிறார்.


வேற படம்னா இன்னைக்கு இருக்குற நிலைமையில வர முடியாதுன்னு சொல்லிருக்கலாம். இது ரெட்ஜெயண்ட் நிறுவன படம். வரலன்னா என்ன நினைப்பாங்களோன்னு வந்துருக்கலாம். இந்தப் படத்தின் இயக்குனர் குஷ்பு. அவங்களுக்கும் விஷாலுக்கும் நல்ல நட்பு இருக்கு. ஜி.கே.ரெட்டிங்கற பெரிய தயாரிப்பாளரின் மகன்கறதால வாய்ப்பு எளிதாகக் கிடைச்சிருக்கு.

அவர் வேறொரு தயாரிப்பாளரின் பேனரில் செல்லமேன்னு நடிக்க வைத்து விஷாலை வளர்த்து விட்டுருக்காரு. அந்த வகையில நாம இருக்குறது எவ்வளவு பெரிய இடம்னு நினைக்காமல் மோசமான பழக்கத்தால இன்னைக்கு இப்படி ஆகிட்டாரு. அது உண்மையிலேயே வருத்தம்தான்.

12 வருஷம் கழிச்சி வருவதால இந்தப் படம் ட்ரோல் பண்ணற மாதிரிதான் இருக்கும். இதுல பழைய விஷால். சந்தானம் எல்லாம் நடிச்சிருக்காங்க. இறந்து போன பலரும் நடிச்சிருக்காங்க. இதனால இது பழைய படம் என்ற ஆபத்தும் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News