புரூஸ்லீ டைரக்டர்னா யாருன்னு தெரியுமா? மாமன் பட இயக்குனர் சொல்றதைக் கேளுங்க..!
சூரி எழுதிய கதையை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி வருகிறார். அதுதான் மாமன் படம். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஜோடியாக நடித்துள்ளார். காமெடி நடிகராக இருந்து ஹீரோவாகி இப்போது கதாசிரியராகவும் சூரி உயர்ந்துள்ளார் என்பது அவரது அசுர வளர்ச்சியையே காட்டுகிறது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் உள்ள இந்தப் படம் வரும் மே 16 அன்று வெளியாகிறது. படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் சினிமாவுக்குள் எப்படி வந்தார்? அவரது அனுபவங்கள் என்னென்னன்னு பார்க்கலாமா...
ஆரம்பத்தில் காலேஜ்ல குறும்படம் எடுக்கும் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டார். அதற்காகவே குறும்படங்களை இயக்க ஆரம்பித்தார் பிரசாந்த் பாண்டியராஜ். தொடர்ந்து அதன்மேல் இருந்த ஆர்வம்தான் அடுத்தடுத்த குறும்படங்கள். அதன்பிறகு அதில் இருந்து வந்ததுதான் நாளைய இயக்குனர். அப்போது இயக்குனர் பிரபுசாலமன் நிறைய ஐடியாக்களைக் கொடுத்தார்.
அடுத்த சீசனில் இயக்குனர் பாண்டிராஜ் சார் பல ஐடியாக்களைக் கொடுத்தார். செமி ஃபைனல் வரை என் படங்களைக் கொண்டு போனேன். பாண்டிராஜ் சார் கதை வச்சிருந்தாலோ, ஒர்க் பண்ண விருப்பம் இருந்தாலோ வான்னு ஆர்வத்துடன் சொன்னார். சூதுகவ்வும், பீட்ஷா படங்கள் பெரிய ஹிட். அவங்க எல்லாம் நாளைய இயக்குனர்களில் இருந்து வந்தவர்கள் தான். அப்படித்தான் இது நம்ம ஆளு, பசங்க 2 படத்தில் பாண்டிராஜ் சார்கிட்ட ஒர்க் பண்ணினேன்.
பாஸ்கரன் மேனேஜர், ஜி.வி.பிரகாஷ்சுக்கு கதை சொல்லி புருஸ்லீ பண்ணினோம். அதுக்கு அப்புறம் நாம நிறைய வேலை இருக்கு. நிறைய கத்துக்கணும்னு ஒர்க் பண்ணுனேன். நாலு வருஷம் கஷ்டப்பட்டேன். அப்படி வந்தது தான் விலங்கு படம்.
நாளைய இயக்குனர்கள் முடிச்சதுக்கு அப்புறம் நிறைய வாய்ப்புகள் வந்தது. புருஸ்லீக்கு அப்புறம்தான் இல்லை. விலங்குல ஜெயிச்சதுக்கு அப்புறம்தான் எனக்கு தைரியம் வந்தது. எந்தத் தைரியத்துல நாம இவ்ளோ நாளா இருந்தோம்னு ஃபீல் பண்ணினேன்.
அது ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை. முனீஸ்காந்த் சினிமாவை லவ் பண்ணி வேலை செய்யும்போது என்னைக்கா இருந்தாலும் அது கைவிடாதுன்னு சொல்வார். என்ன தைரியத்துல இந்த ஃபீல்டுல வந்து இவ்ளோ நாளா நிக்கிறாங்கன்னு எனக்கு முனிஸ்காந்த் மாதிரி நடிகர்களைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும் என்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ்.
என்னை ஆடியன்ஸ் எப்படி எல்லாம் திட்டுனாங்களோ அவங்க எல்லாரும் விலங்கு படத்துக்கு அப்புறம் அந்த ட்வீட்டைக் கோட் பண்ணி சாரி சொன்னாங்க என்கிறார் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்.
கிச்சான்கள் எல்லாம் இளிச்சவாயன்கள் இல்லங்கற டயலாக் விலங்குல ரொம்பவே பிரபலம். இவன் ஒண்ணுக்குமே லாயக்கி இல்ல. இனி இவன் வரவே மாட்டான்னு நினைப்பாங்க. ஆனா அவனுக்குள்ள நிறைய திறமை இருக்கும். அவனை நாம தான் குறைச்சலா எடைபோட்டு பேசுவோம். அதனால தான் அவன் அப்படி மாறிடுறான்னு நான் நினைக்கிறேன். மணிரத்னம், பாண்டிராஜ், மாரிசெல்வராஜ், ரஞ்சித், வெற்றிமாறன்னு ஒவ்வொரு இயக்குனரிடம் இருந்து ஒவ்வொன்னையும் படிக்கிறேன். என்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ்.