அலட்சியம் காட்டும் வெற்றிமாறன்.. தாமதமாகும் வாடிவாசல்.. அட அதுதான் காரணமாம்!

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். தொடர்ந்து 6 படங்களையும் ஹிட் கொடுத்து சினிமாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். எடுத்த 6 படங்களில் 4 படங்களை தனுஷை வைத்து மட்டுமே ஹிட் கொடுத்தவர். கடைசியாக அவரின் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையில் ஈடுபட்டு வருகிறார். அதற்கான படப்பிடிப்புகள் கொஞ்சம் […]

;

By :  Rohini
Published On 2023-06-01 11:44 IST   |   Updated On 2023-06-01 11:44:00 IST

vetri

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். தொடர்ந்து 6 படங்களையும் ஹிட் கொடுத்து சினிமாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். எடுத்த 6 படங்களில் 4 படங்களை தனுஷை வைத்து மட்டுமே ஹிட் கொடுத்தவர்.

கடைசியாக அவரின் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையில் ஈடுபட்டு வருகிறார். அதற்கான படப்பிடிப்புகள் கொஞ்சம் இருப்பதால் அது நடைபெற்று கொண்டு வருகின்றன.

vetri1

முதலில் ஒரே பாகமாக எடுக்கப்பட இருந்த விடுதலை பாகம் இரண்டு பாகங்களாக தயாரானது. அதனால் வெற்றிமாறனுக்கு ஒரு படத்திற்கு 15 லட்சம் வீதம் இரண்டு பாகங்களுக்கு சேர்த்து 30 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டதாம்.

விடுதலை படத்திற்கு பிறகு வெற்றிமாறன் சூர்யாவுடன் வாடிவாசல் திரைப்படத்தில் இணைகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் இப்போது கோடம்பாக்கத்தில் வரும் பேச்சு என்னவென்றால விடுதலை பாகத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆனபிறகே வாடிவாசலில் இணைவேன் என்று சொல்லி வருகிறாராம் வெற்றிமாறன்.

vetri2

ஏன் இந்த அலட்சியப்போக்கு என்று விசாரித்ததில் இரண்டாம் பாகம் வெளியாகி எந்த மாதிரியான வரவேற்பை பெறுகிறதோ அதற்கேற்றவாறு வாடிவாசல் படத்திற்கான சம்பளத்தை அதிகரிக்கவே வெற்றிமாறன் அந்தப் படத்தின் ரிலீஸ் வரை காத்திருப்பார் என்று சொல்கிறார்கள்.

Tags:    

Similar News