கோட் படத்தில் பவதாரிணியை பாட வைத்தது ஏன்னு தெரியுமா? கனத்த இதயத்துடன் யுவன் சொன்ன தகவல்

தளபதி விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள  கோட் (GOAT) படத்தில் 2வது சிங்கிளாக 'சின்ன சின்ன கண்கள்' பாடல் வந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் பாடலை விஜயும், பவதாரிணியும் பாடி உள்ளார்கள். c தான் இறந்துவிட்டாரே எப்படி பாடினார் என்று கேள்வி எழுகிறது. அது குறித்து இங்கு பார்ப்போம். யுவன் சங்கர் ராஜா இதற்கு வருத்தத்துடன் இவ்வாறு பதில் அளித்துள்ளார். 'நானும் வெங்கட்பிரபுவும் பெங்களூரு போய்ட்டு இந்தப் பாடலுக்கான பதிவைப் பார்த்துக்கிட்டு […]

By :  sankaran v
Update: 2024-06-23 05:00 GMT

GOAT

தளபதி விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள கோட் (GOAT) படத்தில் 2வது சிங்கிளாக 'சின்ன சின்ன கண்கள்' பாடல் வந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் பாடலை விஜயும், பவதாரிணியும் பாடி உள்ளார்கள். c தான் இறந்துவிட்டாரே எப்படி பாடினார் என்று கேள்வி எழுகிறது. அது குறித்து இங்கு பார்ப்போம்.

யுவன் சங்கர் ராஜா இதற்கு வருத்தத்துடன் இவ்வாறு பதில் அளித்துள்ளார். 'நானும் வெங்கட்பிரபுவும் பெங்களூரு போய்ட்டு இந்தப் பாடலுக்கான பதிவைப் பார்த்துக்கிட்டு இருந்தோம். அப்போ எங்க அக்கா பவதாரிணி மருத்துவமனையில இருந்தாங்க.

இதையும் படிங்க... பிளாப் கொடுத்தும் அதிக சம்பளம் கேட்ட ஜெயம் ரவி!.. வாய்ப்பை தட்டி தூக்கிய விஜய் சேதுபதி

தேறி வந்து இந்தப் பாட்டைப் பாடிருவாங்கன்னு நினைச்சோம். ஆனா துரதிர்ஷ்டவசமா இறந்துட்டாங்க. அதுக்கு அப்புறம் ஏஐ டெக்னாலஜில இந்தப் பாட்டைப் பதிவு பண்ணிருக்கோம்'னு சொன்னாரு.

அதாவது ஏஐ (AI) எனப்படும் செயற்கை தொழில்நுட்பத்தில் பவதாரிணி குரலை இந்தப் பாட்டுல பதிவு பண்ணியிருக்காங்க. அதாவது இறந்த பிறகும் இந்தப் பாட்டை அவர் பாடுவது போல எடுத்துள்ளார்கள்.

ஆனால் இந்தப் பாடல் ரொம்ப நாள் கழிச்சி அழகா வந்துருக்கு. காதல், குழந்தையின் அன்பு, குடும்பம் என அனைத்து விஷயங்களையும் சொல்வதோடு நல்லா புரியுற மாதிரியும் இருக்கிறது. பாடலை எழுதியவர் கபிலன் வைரமுத்து.

இந்தப் பாடலில் எனக்கு ரொம்ப பிடிச்ச வரி பறவைக் கூட்டில் விண்மீன் பூக்க என்று அழகாகப் போட்டு இருப்பார். அதைப் போல மனசெல்லாம் ஒளிவீச, மீசை கூட மழலை பேசன்னு அழகா எழுதியிருப்பார்.

Chinna Chinna Kangal

அதைப் போல முதல் சரணத்துல விஞ்ஞான கருத்தை ரொம்ப அழகா எளிமையா சொல்லிருப்பாரு. மழை பொழிகிற இரண்டாம் நாளில் விழும் நீரில் மாசில்லை என அழகா சொல்லிருப்பார். ஏன்னா முதல் நாளில் தூசு எல்லாம் அடங்கிடும். 2ம் நாளில் மழை பெய்தால் மாசில்லாமல் விழும். அதே மாதிரி இது எனக்கு 2வது வாழ்க்கை. இதை நான் நல்லா வாழ்வேன்னு விஜய் சொல்ற மாதிரி இருக்கும்.

ஏற்கனவே 'விசில் போடு' பாடலில் 'சேம்பைன் ஒண்ண திறக்கட்டுமா'ன்னு வந்தது. அந்தக் குறையைத் தீர்த்து வைக்கிற மாதிரி தான் அழகா இந்தப் பாடல் வந்துருக்கு. மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News