நடிகைக்காக ரெஸ்ட் ரூமை கழுவிய டிராகன் பட இயக்குனர்!.. லீக் பண்ணிய நடிகர்!.. மானம் போச்சே!..

Aswath Marimuthu: சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சில இடங்களில் ஈகோ பார்க்காமல் இருக்க வேண்டும். இல்லையேல் வாய்ப்பு கையை விட்டு போய்விடும். இது நடிகர்களுக்கு மட்டுமில்லை. இயக்குனர்களுக்கும் பொருந்தும். அப்பாவின் பின்னணியில் சினிமாவில் வருபவர்களுக்கு இது பொருந்தாது. ஆனால், எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் அறிமுக நடிகராகவோ, இயக்குனராகவோ வருபவர்கள் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டும். பல சிக்கல்களையும், பிரச்சனைகளையும் தாண்டி படத்தை எடுத்து, அது ரிலீஸாகி, வெற்றி பெற்றால் […]

;

Published On 2025-03-18 15:58 IST   |   Updated On 2025-03-18 15:58:00 IST

Aswath Marimuthu: சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சில இடங்களில் ஈகோ பார்க்காமல் இருக்க வேண்டும். இல்லையேல் வாய்ப்பு கையை விட்டு போய்விடும். இது நடிகர்களுக்கு மட்டுமில்லை. இயக்குனர்களுக்கும் பொருந்தும். அப்பாவின் பின்னணியில் சினிமாவில் வருபவர்களுக்கு இது பொருந்தாது.

ஆனால், எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் அறிமுக நடிகராகவோ, இயக்குனராகவோ வருபவர்கள் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டும். பல சிக்கல்களையும், பிரச்சனைகளையும் தாண்டி படத்தை எடுத்து, அது ரிலீஸாகி, வெற்றி பெற்றால் மட்டுமே இயக்குனருக்கு அடுத்த படம் கிடைக்கும்.

அப்படி பொறியியல் கல்லூரி மாணவராக இருந்து சினிமாவுக்கு வந்தவர்தான் அஸ்வத் மாரிமுத்து. பிரதீப் ரங்கநாதனும் இவரும் கல்லூரி தோழர்கள் என சொல்லப்படுகிறது. சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தில் வேறு வேலைக்கு செல்லாமல், குடும்பத்திடமும் போராடி குறும்படங்களை இயக்கி அப்படியே சினிமாவுக்கு வந்தவர்கள்.

பல வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கூட அஸ்வத் மாரிமுத்து கலந்துகொண்டார். இவரின் சில குறும்படங்கள் அதில் திரையிடப்பட்டது. அதன்பின் சினிமாவுக்காக ஒரு கதையை உருவாக்கினார். பல வருடங்கள் போராடி அசோக் செல்வனை வைத்து 'ஓ மை கடவுளே' என்கிற திரைப்படத்தை இயக்கினார்.

இந்த படத்தில் ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே, அடுத்து பிரதீப்பை வைத்து டிராகன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். கடந்த 21ம் தேதி வெளியான இந்த திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. அடுத்து சிம்புவின் 51வது படத்தை இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து.

இந்நிலையில், நடிகர் அசோக் செல்வன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ஓ மை கடவுளே ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது ஒரு லாட்ஜில் தங்கியிருந்தோம். ரித்திகா நிறைய தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி அவர் ரெஸ்ட் ரூமுக்கு போவார். அப்படி போகும்போது ரெஸ்ட் ரூம் சுத்தமாக இல்லை என சொல்லிவிட்டார். உடனே அஸ்வத் மாரிமுத்து ரெஸ்ட் ரூமை கிளீன் பண்ணார்’ என சொல்லியிருக்கிறார்.

Tags:    

Similar News