சிவாஜிக்கு அம்மாவா 15 வயதில் நடித்த நடிகை.. இப்போ டீக்கடை வியாபாரம்..

By :  Rohini
Update: 2024-12-18 01:30 GMT

sivaji

யார் அந்த நடிகை?:

பதினைந்தாவது வயதில் சிவாஜிக்கு அம்மாவாக நடித்த ஒரு நடிகை பற்றிய ஒரு செய்தி தான் இப்போது வைரலாகி வருகின்றது. சிவாஜிக்கு அப்போது வயது 56 இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அவருக்கு அம்மாவாக 15 வயது மதிக்கத்தக்க ஒரு நடிகையை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர் வேறு யாரும் இல்லை. நடிகை பத்மஸ்ரீ .ஆரம்பத்தில் பல நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பத்மஸ்ரீ மேஜர் சுந்தர்ராஜனால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். மேஜர் சுந்தர்ராஜன் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் கல்தூண்.

இந்த படத்தில் சிவாஜிக்கு அம்மாவாக பத்மஸ்ரீ நடித்திருக்கிறாராம். அப்போது அவருக்கு வயது 15 என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். பத்மஸ்ரீ பற்றி இப்படி ஒரு அறிமுகம் கொடுப்பதற்கு பதிலாக அவர் வாய்ஸ் கொடுத்த விளம்பர படத்தை சொன்னால் அனைவருக்கும் ஞாபகம் வரும். குங்குமம் நாளிதழ் விளம்பரத்தில் கணீர் குரலில் ஒரு பெண் வாய்ஸ் பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும். அதேபோல ரோஜா பாக்கு விளம்பரத்தையும் கேட்டிருப்போம். இந்த இரண்டு விளம்பரங்களும் அப்போதைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமானஊ.

விளம்பரத்தில் கொடிகட்டி பறந்தார்:

இந்த இரண்டு விளம்பரங்களுக்கும் உயிர் கொடுத்ததே பின்னணியில் வரும் அந்த குரல். இந்த குரலுக்கு சொந்தக்காரர் தான் இந்த பத்மஸ்ரீ. இந்த விளம்பரம் மட்டும் இல்லாமல் சத்யா விளம்பரம், வசந்த் அண்ட் கோ விளம்பரம் என ஏகப்பட்ட விளம்பரங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார் பத்மஸ்ரீ. இவருடைய சிறுவயதில் அப்பாவை இழந்து வீட்டு சுமையை தாங்கிக்கொண்டிருந்த நேரத்தில் தான் நாடகங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. நாடகத்தில் இவருடைய நடிப்பை பார்த்து மேஜர் சுந்தர்ராஜன் அவர் இயக்கிய கல் தூண் படத்தில் சிவாஜிக்கு அம்மாவாக நடிக்க வைத்திருக்கிறார்.

அந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டிருக்கிறது. அதன் பிறகு குரு சிஷ்யன் படத்தில் ரஜினிக்கு அம்மாவாகவும் நடித்திருக்கிறாராம். அதோடு சத்யராஜின் முதல் ஹீரோயின் நான்தான் என பத்மஸ்ரீ ஒரு பேட்டியில் கூறினார். அவசரக்காரி என்ற படத்தில் சத்யராஜ் வில்லனாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக வில்லி கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறாராம். அதைப்போல ஏவிஎம் தயாரிப்பில் அர்ஜுன் நடித்த சொந்தக்காரன் திரைப்படத்திலும் அர்ஜுனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.

டீக்கடை ஓனர்:

மீண்டும் ஏவிஎம் தயாரிப்பில் மோகன் நடிப்பில் வெளிவந்த வசந்தி என்ற திரைப்படத்திலும் விணுச்ச்சக்கரவர்த்திக்கு அம்மாவாக நடித்திருக்கிறாராம். இப்படி ஆரம்பத்தில் அம்மா கதாபாத்திரத்திலும் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்த பத்மஸ்ரீ விளம்பரத் துறைக்கும் வந்து தன்னுடைய குரலால் அனைவராலும் பாராட்டப்பட்டு இருக்கிறார். இவரது குரல் அனைவரையும் ஈர்த்திருக்கிறது. இப்போது இவர் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறாராம். இவர் டீக்கடை நடத்தி வருவதை பார்த்த பலர் வறுமையில் வாடுகிறார் போல என நினைத்து நிறைய முறை இவரிடமே வந்து கேட்டிருக்கிறார்கள்.


ஆனால் தன்னுடைய அம்மாவும் இறந்த பிறகு இவர் தனிமையை அனுபவித்து இருக்கிறார். அதனால் டீக்கடை வைத்து அந்த தனிமையை போக்கிவிடுவோம் என்பதற்காகவே நடத்தி வருகிறேன். இது விருப்பப்பட்டு நான் செய்யும் தொழில். மற்றபடி எந்த ஒரு வறுமையும் கிடையாது. நான் கஷ்டப்படவும் இல்லை என்று கூறியிருக்கிறார். அது மட்டும் அல்ல அதிகாலை ஐந்து மணிக்கு கடையை திறந்து விடுவாராம். இதுவரைக்கும் பட்டுப்புடவை அணிந்து கொண்டுதான் அந்த டீக்கடை வியாபாரத்தை நடத்தி வருகிறாராம் பத்மஸ்ரீ. சாதாரண புடவை கட்டி நான் கடைக்கு போகவே மாட்டேன். காலை ஐந்து மணிக்கு நீங்கள் வந்து பார்த்தாலும் பட்டுப் புடவையில் தான் ஜொலிப்பேன் என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

Tags:    

Similar News