ஒவ்வொரு படத்துலயும் 10 நிமிஷ காமெடி.. தூள் கிளப்பும் ரஜினி! இதன் பின்னணி என்ன தெரியுமா?
ரஜினி நடிகராக மாறி நட்சத்திர அந்தஸ்தை பெற்று சூப்பர் ஸ்டாராக அந்த இடத்தை தொட்டிக் கொண்டிருந்த நேரம். அப்போது பஞ்சு அருணாச்சலம் ரஜினியிடம் ஒரு கதை சொல்கிறார். நம் மீது நம்பிக்கை வைத்து பெரிய ஆளுமை கொண்ட ரைட்டர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் கதை சொல்லும் போது சரி நடிக்கிறேனு சொல்லிவிட்டார் ரஜினி. படமும் ஆரம்பித்து விட்டது.
படம் ஆரம்பித்து ஐந்து , ஆறு நாள்களில் ரஜினிக்கு ஒரு சின்ன நெருடல். ஆஹா.. நம்மள வச்சி செய்றாங்க. வேலைக்கு ஆவாது இந்தப் படம் என நினைத்து இதை யாரிடம் சொல்வது என முழித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. பஞ்சு அருணாச்சலம் தான் நடிக்க சொன்னது. அவருடைய தயாரிப்பு. அதனால் அவரையே கூப்பிட்டு இது ஒன்னும் தேறும்னு தோணல. இது எனக்கான படமா இல்ல.
என்னைய வச்சு இந்தப் படம் எடுத்துக் கொண்டிருக்கீங்க. மாட்டு வாலை தூக்கி மணி பார்க்கிறேன். சாணிய வச்சு ராட்டி தட்டுறேன். நீங்க ஏதோ காதல் கதைனு சொன்னீங்க. மாதவி இருக்காங்கனு சொன்னீங்க. அப்பா சண்டைனு சொன்னீங்க. அதெல்லாம் பெருசா நிற்கிற மாதிரி தெரியவில்லை. இதற்கு நான் தாங்குவேனா? என பஞ்சு அருணாச்சலத்திடம் கேட்டிருக்கிறார் ரஜினி.
அதற்கு பஞ்சு அருணாச்சலம் ‘எல்லா ஹீரோக்களுக்கும் ரெண்டு சண்ட வைக்கிறோம். அதற்கு மீறி போனா மூணு சண்ட.உனக்காக ஐந்து சண்ட வைக்கிறோம். இப்போது 1984. இப்பவே ஐந்து சண்டைனா ஐந்து வருடங்கள் கழித்து எத்தனை சண்ட போடுவ நீ? அதனால காமெடி பண்ணு.தில்லு முல்லு படத்துல காமெடி ரோலில் நடிச்சிருக்கீயே. அப்புறம் என்ன?’ என கேட்டாராம்.
இருந்தாலும் ரஜினி கேட்கவே இல்லையாம். சரி இந்தப் படம் ஓடல. இப்போ உனக்கு என்ன பிரச்சினை? என பஞ்சு அருணாச்சலம் கேட்டிருக்கிறார். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. உங்களுக்குத்தான் பிரச்சினை. என்ன வச்சு படம் எடுத்து ஓடலைனா உங்களுக்குத்தான் பிரச்சினை என சொன்னாராம் ரஜினி. அதற்கு பஞ்சு அருணாச்சலம் ‘ரைட்.. நான் நஷ்டமடைஞ்சிருக்கிறேன். ஆனா இந்தப் படத்துல நடி. இந்தப் படம் ஓடும். ஆனா இந்தப் படத்துக்கு பிறகு உன்னுடைய கடைசி படம்னு ஒன்னு இருக்கும்ல. அதுவரைக்கும் உன்னால காமெடிய விட முடியாது.’
‘ நீ பதினைந்து நிமிஷம் காமெடி பண்ணிட்டுத்தான் அடுத்த கட்டத்திற்கே போக முடியும். அதனால நீ நடி’ என பஞ்சு அருணாச்சலம் கட்டாயத்தின் பேரில் ரஜினி நடித்த படம்தான் தம்பிக்கு எந்த ஊரு திரைப்படம். இந்தப் படத்திற்கு முன்பு வரை ரஜினி ஆக்ஷன் ஹீரோவாக பேமிலி ஆடியன்ஸை கவரும் நடிகராக இருந்தார். ஆனால் இந்தப் படத்திற்கு பிறகுதான் அவரின் காமெடி என்பது வெளிச்சத்திறகு வந்தது. இந்த தகவலை கரு பழனியப்பன் ஒரு மேடையில் கூறினார்.