‘பேட்ட’ படத்தில் இப்படித்தான் சான்ஸ் கிடைச்சதா? இவ்வளவு பிராங்கா சொல்லிட்டாரே விஜய்சேதுபதி

By :  Rohini
Update: 2025-01-22 11:21 GMT

மக்கள் செல்வன்: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடி பல கஷ்டங்களை தாண்டி வந்தவர். நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் நடிகர்கள் ஏராளமான பேர். ஆனால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அது என்ன ரோலாக இருந்தாலும் பரவாயில்லை என கிடைத்த ரோல் எல்லாவற்றிலுமே நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவர் தான் விஜய் சேதுபதி.

இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் ஜெயம் ரவி, தனுஷ், கார்த்தி இவர்களின் படங்களில் ஒரு கூட்டத்தில் நடுவே இருக்கும் துணை நடிகராக கூட இவர் நடித்திருக்கிறார். நான் மகான் அல்ல படம் ,எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி ,புதுப்பேட்டை போன்ற படங்களில் எல்லாம் விஜய் சேதுபதி ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பார். ஆனால் அப்போது அது விஜய் சேதுபதி என யாருக்குமே தெரியாது .

கெத்து காட்டிய தருணம்; இவர் பிரபலமான பிறகு தான் இந்த படங்களில் எல்லாம் இவர் நடித்திருக்கிறார் என்ற உண்மையே அனைவருக்கும் தெரிய வந்தது .ஹீரோவாக தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விஜய் சேதுபதி தொடர்ந்து கிராமத்து கதைகளை மையப்படுத்தி வந்த படங்களிலேயே நடித்து மக்கள் செல்வனாக தன்னை நிலைநாட்டிக் கொண்டார். அதன் பிறகு கமர்சியல் படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார்.

தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த விஜய் சேதுபதிக்கு ஃபேன்ஸ் ஃபாலோயர்ஸ்களும் அதிகமாகினர். இப்படி பீக்கில் இருக்கும்போதே பேட்ட திரைப்படத்தில் வில்லனாக களமிறங்கினார். அது அனைவருக்கும் பெரிய ஆச்சரியத்தை தந்தது. தொடர்ந்து ஹீரோவாக ஹிட் கொடுத்து வரும் விஜய் சேதுபதி திடீரென எப்படி வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்டார் என்ற ஒரு கேள்வி அனைவரும் மத்தியில் எழுந்தது.

காலையில் வந்த அதிர்ச்சி : ஆனால் அந்த படத்தில் அதுவும் ரஜினிக்கு வில்லன் எனும்போது இன்னும் அவருடைய மாஸ் அதிகமானது. ஆனால் அந்த படத்தில் நான் நடிக்கப் போகிறேன் என எனக்கே தெரியாது என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இரவு தூங்கி காலை அவருடைய மனைவி ரஜினி படத்தில் வில்லனாக நடிக்கிறீர்களாமே எனச் சொல்லிக் கொண்டுதான் எழுப்பினாராம். இதைக் கேட்டதும் விஜய் சேதுபதிக்கு அதிர்ச்சி .ஏன்டி இது எனக்கே தெரியாது என சொல்லிக்கொண்டே செய்தியை பார்த்திருக்கிறார்.

அதன் பிறகு தான் கார்த்திக் சுப்பராஜ் விஜய் சேதுபதிக்கு தொலைபேசியில் அழைத்து இந்த விஷயத்தை சொன்னாராம். இதைப் பற்றி விஜய் சேதுபதி குறிப்பிடும் பொழுது இரண்டு நாளுக்கு முன்பே ஊருக்கே தெரிந்த விஷயத்தை அதன் பிறகு தான் கார்த்திக் சுப்புராஜ் ரகசியமாக எனக்கு சொன்னார் என மிகவும் கிண்டலாக பேசியிருந்தார் விஜய் சேதுபதி .ஆனால் இந்த படத்திற்கு பிறகு தான் வில்லனாகவும் தன்னால் மாஸ் காட்ட முடியும் என்பதை நிரூபித்தார் விஜய் சேதுபதி.

Tags:    

Similar News