எந்திரன் ஷூட்டிங்கில் ரஜினி செய்ததை யாருமே செய்ய மாட்டாங்க!.. நெகிழும் ஷங்கர்...

By :  Murugan
Update: 2024-12-21 13:00 GMT

ஷங்கர்

Shankar: ரஜினி எப்போதும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் நடிகராக இருந்திருக்கிறார். இப்போதும் இருந்து வருகிறார். அதற்கு காரணம் அவர் கஷ்டப்பட்டுதான் சினிமாவில் மேலே வந்தார். துவக்கத்தில் சில அவமானங்களையும் சந்தித்திருக்கிறார். ரஜினி பிறப்பால் ஒன்றும் பெரிய பணக்காரர் இல்லை.

பெங்களூர், மைசூர் பகுதிகளில் நண்பர்களுடன் சேர்ந்து பிளாட்பர்மில் கூட தூங்கியிருக்கிறார். நடிப்பின் மீது ஆசைப்பட்டு சென்னை வந்த போது ஒரு சிறையை வாடகைக்கு எடுத்து அதில்தான் வசித்து வந்தார். எல்லா ஏற்ற, இறக்கங்களையும் பார்த்து, அனுபவப்பட்டு வளர்ந்தவர்தான் ரஜினி.

அதனால்தான் எந்த விழாவில் பேசும்போதும் அவரிடம் தத்துவம் தூக்கலாகவே இருக்கும். அனுபவம் இல்லாமல் அப்படி பேச முடியாது. பல வெற்றி தோல்விகளை கடந்து வந்திருக்கிறார். இந்திய சினிமாவே அவரை சூப்பர்ஸ்டார் என அழைத்தாலும் அவரோ எளிமையாகவே இருக்கிறார்.


எளிமையான தோற்றம், உடை, உணவு என ஒரு யோகியின் மனநிலையில்தான அவர் இருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் முயல் சாப்பிடும் கேரட் போன்ற உணவைத்தான் அவர் சாப்பிடுகிறார் என மறைந்த நடிகர் விவேக்கே ஒரு விழாவிலேயே பேசினார். படப்பிடிப்பு தளங்களில் கேரவானில் இருக்காமல் ஒரு மரத்தின் அடியில்தான் எப்போதும் அமர்ந்திருப்பாராம்.

படப்பிடிப்பு குழு வர தாமதமானால் மரத்தின் அடியின் கீழே தூங்கிவிடும் பழக்கம் ரஜினிக்கு இன்னமும் இருக்கிறது. இதை அவருடன் வேலை செய்த நபர்களுக்கு நன்றாகவே தெரியும். தன்னை ஒரு உச்ச நடிகர் என்றோ, சூப்பர்ஸ்டார் என்றோ எப்போதும், எங்கேயும் அவர் காட்டிக்கொண்டது இல்லை. அப்படி அவர் பேசியதும் இல்லை.

இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார். எந்திரன் படத்தின் சில காட்சிகளை ரயில்வே டிராக்கில் எடுத்தோம். ரயில்வேயில் மிகவும் குறைவான நேரத்திற்கே ஷூட்டிங் அனுமதி கொடுப்பார்கள். எனவே, லன்ச் பிரேக் விடாமல் காட்சிகளை எடுத்துக்கொண்டிருந்தேன். 3 மணிக்கு பிரேக் விட்டுவிட்டு நாங்கள் எல்லோரும் சாப்பிட சென்றுவிட்டோம்.

வந்து பார்த்தால் ரஜினி சார் ரயில்வே டிராக் அருகிலேயே இருந்தார். ரயில்வே டிராக் எப்படி கலீஜாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த இடத்திலேயே அவர் சாப்பிட்டுவிட்டார். அங்கிருந்து கேரவானுக்கு போக 20 நிமிடம் ஆகும். நம்மால் தாமதமானால் ஷுட்டிங் தாமதமாகும் என நினைத்தே அவர் அங்கேயே சாப்பிட்டிருக்கிறார்’ என நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.

Tags:    

Similar News