ரஜினி அடிக்கடி பார்க்கும் 3 திரைப்படங்கள் இதுதானாம்!.. அட இது அவரே சொன்னது!...
Rajinikanth: இந்திய சினிமாவே தலைவர் என அழைக்கும் ஒரே நடிகர் ரஜினி மட்டுமே. ஷாருக்கான், சச்சின் தெண்டுல்கர் கூட ரஜினியை தலைவர் என்றே டிவிட்டரில் குறிப்பிடுவார்கள். அந்த அளவுக்கு கடந்த 40 வருடங்களாக திரை வானில் சூப்பர்ஸ்டாராக மின்னிக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்.
அபூர்வ ராகங்கள் படத்தில் துவங்கி கூலி வரை 50 வருடங்களாக தொடர்ந்து நடித்து வருகிறார். தனக்கான சூப்பர்ஸ்டார் என்கிற இடத்தை இதுவரை அவர் யாருக்கும் விட்டு கொடுத்தது இல்லை. இவர்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என சொல்லப்படும் நடிகர்களே ‘சூப்பர்ஸ்டார் என்றால் அது தலைவர் மட்டுமே’ என சொல்லும் அளவுக்கும் இன்னனும் ஆக்டிவாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 12ம் தேதி கூலி படத்தில் ரஜினி அசத்தலாக நடனமாடும் வீடியோவை லோகேஷ் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி இருந்தார். இந்த படத்திற்கு பின் ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நல்ல ரசிகன்தான் ஒரு நல்ல கலைஞன் ஆக முடியும் என சொல்வார்கள். அப்படிப்பார்த்தால் ரஜினி ஒரு மிகச்சிறந்த கலைஞர். ஒரு புதிய படம் வெளியாகி பேசப்பட்டால் உடனே அந்த படத்தை பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட படக்குழுவை நேரில் அழைத்து அந்த படத்தின் சிறப்பம்சங்களை பாராட்டி பேசி அவர்களை உற்சாகப்படுத்துவார்.
கோலிவுட்டில் அதை செய்து வரும் ஒரே நடிகர் ரஜினி மட்டுமே. சின்ன நடிகர், அறிமுக நடிகர் என எதையுமே அவர் யோசிக்க மாட்டார். அந்த ரசிப்புத்தன்மைதான் ரஜினியை இன்னும் கலையுலகில் உயிர்ப்புடன் இயங்க வைக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் திரைப்படங்கள் பார்ப்பது ரஜினியின் வழக்கம்.
இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு ஒரு மேடையில் பேசிய ரஜினி ‘பார்ப்பதற்கு எதுவும் புதிய படங்கள் இல்லை எனில் நான் 3 படங்களை மட்டுமே அடிக்கடி பார்ப்பேன். ஒன்று ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ நடித்த ‘காட் ஃபாதர்’. அடுத்து சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல், அடுத்து கமல் நடித்த ‘ஹே ராம்’. ஹே ராம் படத்தை இதுவரை 30, 40 முறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போது அந்த படம் எனக்கு எதையோ புதிதாக கற்று தருகிறது’ என சொல்லி இருக்கிறார்.
நடிகர் கமலின் தீவிர ரசிகர் ரஜினி. கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தை பார்த்துவிட்டு இரவு 2 மணிக்கு அவரின் வீட்டுக்கு சென்று அவரை தூக்கத்திலிருந்து எழுப்பி பாராட்டியவர்தான் ரஜினி. நாயகன் படத்தை பார்த்துவிட்டு உடனே கமலை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அந்த படம் பற்றி சிலாகித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.