சங்கர் கணேஷ் கல்யாணத்துக்கு வந்த சிக்கல்... எம்ஜிஆரும், சிவாஜியும் நடத்திய அற்புதம்

By :  Sankaran
Update: 2024-12-20 16:30 GMT

பிரபல இசை அமைப்பாளர்களான சங்கர் கணேஷ் என்ற இரட்டையர்களில் கணேஷின் மகன் ஸ்ரீகுமார் தனது தந்தை பற்றியும் அவருக்கு கல்யாணம் எப்படி நடந்தது என்பது குறித்தும் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

எங்க அம்மாவோட அப்பா ஜிஎன்.வேலுமணி. பெரிய தயாரிப்பாளர். அவரோட வீட்டுல நிறைய கார் இருக்கும். அதுல ஒரு கார் டிரைவரோட மகன் தான் அப்பா. அவர் தாழ்த்தப்பட்ட ஜாதி. அம்மா குயீன் மாதிரி வளர்ந்தவங்க.

shankar ganesh

எங்க அப்பா அப்போ மியூசிக் டைரக்டர் ஆக முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காரு. பர்சனாலிட்டி கிடையாது. ஆனா எங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும் காதல். அது பரிதாபத்துல வந்தது. அப்போ எங்க அப்பா எனக்கு ஸ்டேட்டஸ் கிடையாதுல்ல.

அதை கிரியேட் பண்ணிட்டுக் கல்யாணம் பண்ணிக்கறேன்னாரு. அப்புறம்தான் மியூசிக் டைரக்டர் ஆனாரு. எங்க தாத்தா எம்ஜிஆர், சிவாஜியோட பல படங்களைத் தயாரித்தவர். படகோட்டி, பாகப்பிரிவினை, பாலும் பழமும்னு சொல்லிக்கிட்டே இருக்கலாம். அவர்; கை இறங்கும்போது எங்க அப்பாவோட கை மேலே போகுது.

எங்க அப்பா எங்க அம்மாவைப் பார்க்கும்போது ரோஜா மலரே ராஜகுமாரின்னு பாட்டுப் பாடியே காதலிக்க ஆரம்பிச்சாங்க. அப்போ எங்க அம்மாவோட அப்பாகிட்ட நான் இசை அமைப்பாளரா ஆகிட்டு வந்து கல்யாணம் பண்றேன்னு சவால் விட்டுட்டு வந்தார் அப்பா. அதே மாதிரி அப்பாவும் மியூசிக் டைரக்டர் ஆகிட்டாரு.

shreekumar

ஆனா அங்க கட்டிக்கொடுப்பதில் சிக்கல். அப்பாவோட தாழ்ந்த ஜாதி அங்க ஒரு தடையா இருக்கு. அப்புறம் எம்ஜிஆரும், சிவாஜியும் 'அவன் தான் சொன்ன மாதிரி மியூசிக் டைரக்டர் ஆகிட்டாம்ல. இப்போ பொண்ணைக் கட்டிக் கொடுக்க வேண்டியதுதானேன்'னு சொல்லி காம்ப்ரமைஸ் பண்ணித் தான் கல்யாணமே நடந்தது என்கிறார் ஸ்ரீகுமார்.

எங்க அப்பா முறைப்படி மியூசிக் கத்துக்கல. ஆனா பாடுன்னா உடனே பாடிடணும். எங்கும் கூச்சப்படக்கூடாதுன்னு சொல்வாரு. அவருக்கு அப்படியே எதிரானவர் சங்கர் மாமா என்கிறார் ஸ்ரீகுமார். எதுவுமே வராது. முடியாதுங்கறது வாயில இருந்து வராது. முயற்சி பண்ணினா முடியும்னு நினைப்பவர் தான் அப்பா என்கிறார் அவர்.

சண்டே ஆனா நான் எம்ஜிஆரு மடியில உட்கார்ந்து அவரு ஊட்டி விட்டு சாப்பிட்டுருக்கேன். சிவாஜி சார் வீட்டுக்கும் போயிருக்கேன். எந்தப் பசங்களுக்கும் கிடைக்காதது எல்லாம் எனக்கு அந்த சின்ன வயசுல கிடைச்சிருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

ஸ்ரீகுமார் அமரன், விக்ரம் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். வானத்தைப் போல, நினைத்தாலே இனிக்கும் போன்ற டெலிவிஷன் தொடர்களிலும் நடித்து வருகிறார். 

Tags:    

Similar News