சாதி பற்றி சர்ச்சையாக பேசிய விவகாரம் - நடிகை மீராமிதுன் கைது..
சாதி பற்றி சர்ச்சையாக பேசிய விவகாரம் - நடிகை மீராமிதுன் கைது..
;மாடலிங் துறையில் உள்ள சக போட்டியாளருடன் ஏற்பட்ட பிரச்சினையில் வெளிச்சத்திற்கு வந்தவர் மீரா மிதுன். தன்னை தானே சூப்பர் மாடல் என்று சொல்லிக்கொண்டு பெருமை அடித்துக்கொள்பவர். பிக்பாஸ் வீட்டில் இயக்குனர் சேரன் மீது அடுக்கடுக்காக புகார் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். என்னை தவறாக தொட்டுவிட்டார் என பழியை போட்டு, அடுத்த நாளே கமல் குறும்படம் போட்டு சூப்பர் மாடல் முகத்திரையை கிழித்தார்.
சமீபத்தில், தலித் சமுதயாத்தை சேர்ந்த இயக்குனர்கள் என் முகத்தை பயன்படுத்துகின்றனர். அவர்களை சினிமாவை விட்டே துரத்த வேண்டும் என பட்டியலின சமூகத்தை குறிப்பிட்டு இழிவாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார். எனவே, அவர் மீது சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் கைது செய்யப்படாலாம் என்ற செய்தி வெளியானதும், வழக்கம்போல் தன்னை தானே சூப்பர் மாடல் என்று சொல்லிக்கொள்பவர், தலைமறைவாகிவிட்டார். மேலும், என்னை கைது செய்வது கனவில்தான் நடக்கும் என வீடியோ வெளியிட்டார். இப்படி பேசிவிட்டு, தலைமறைவு ஆவது தான் இவருடைய வாடிக்கை. ஆனால் இந்த முறை போலீசார் சூப்பர் மாடலை விடுவதாக தெரியவில்லை கட்டாயம் கைது செய்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதோடு அவரை இன்னும் ஏன் போலீசார் கைது செய்யவில்லை என சமூகவலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், கேரளாவில் பதுங்கியிருந்த மீராமிதுனை போலீசார் கைது செய்துள்ளனர். விரைவில் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீசாரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.