விஜய், தனுஷை தொடர்ந்து சூர்யா - வருமான வரி விலக்கு கேட்ட மனு தள்ளுபடி...

விஜய், தனுஷை தொடர்ந்து சூர்யா - வருமான வரி விலக்கு கேட்ட மனு தள்ளுபடி...

;

By :  adminram
Published On 2021-08-17 14:09 IST   |   Updated On 2021-08-17 14:09:00 IST

பொதுவாக ஒவ்வொருவரின் மாத வருமானத்திற்கு ஏற்றார் போல் வரி செலுத்துவது என்பது வழக்கமான நடைமுறைதான். அதிலும், கோடிகளில் சம்பளம் பெறும் நடிகர், நடிகைகள் மிகவும் அதிகமாக வரி செலுத்துபவர்கள் ஆவார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா 2007-08, 2008-09-ம் ஆண்டுகளுக்கு ரூ. 3,11,96,000 வரி செலுத்த வேண்டும் என்று 2011-ல் வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் 3 ஆண்டுகளுக்கு வட்டியையும் அவர் சேர்த்து செலுத்த வேண்டும் என வருமானதுறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதைத்தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு செய்ததால் வரிவிலக்கு வேண்டுமென சூர்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வருமான வரி வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு கேட்ட அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு மனு தொடர்ந்து, நீதிபதி அவரை கடுமையாக விமர்சித்து பெரும் சர்ச்சையானது. அதேபோல், நடிகர் தனுஷும் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு மனு தொடர்ந்து நீதிபதியின் கண்டிப்பு ஆளானார். ஆனால், சூர்யா வரி விலக்கு கேட்கவில்லை. வருமான வரிக்கு செலுத்த சொன்ன வட்டி தொகையிலிருந்து விலக்கு கேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News