விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகையின் கணவரை ஓகே செய்த அமீர்கான்... ஓர்த் இல்ல ஜி...
அமீர்கான் தனது படத்தில் விஜய் சேதுபதியை நீக்கிவிட்டு சமந்தாவின் கணவர் நாக சைதன்யாவை ஒப்பந்தம் செய்திருப்பதை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
�
ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகி வரும் லால்சிங் சத்தா படத்தில் அமீர் கான் சீக்கியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கரீனா கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் ஷாருக் கான் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். கடந்தாண்டு டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம் கொரோனா சூழலால் தள்ளிப்போனது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் முக்கியமான ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அமீர் கான் எதிர்பார்த்ததை விட விஜய் சேதுபதி உடல் எடையைக் கூட்டி விட்டதாகவும், அதனால் அமீர் கான் அப்செட் ஆனதாகவும் கூறப்படுகிறது. இதனால், லால்சிங் சத்தா படத்திலிருந்து விஜய் சேதுபதி கழற்றிவிடப்பட்டார்.
இந்நிலையில், அந்த கதாபாத்திரத்தில் நடிகரும், சமந்தாவின் கணவருமான நாக சைதன்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் கோலிவுட் ரசிகர்கள் இப்படத்தினை கலாய்த்து வருகிறார்கள். பவானி ரேஞ்சுக்கு இல்லனாலும் பாத்துக்கோங்க என கமெண்ட்கள் றெக்கை கட்டி வருகிறது.