விஜய்சேதுபதி இரட்டை வேடத்தில் ‘அன்னபெல்லா சேதுபதி’ - தெறிக்கும் புகைப்படங்கள்....

விஜய்சேதுபதி இரட்டை வேடத்தில் ‘அன்னபெல்லா சேதுபதி’ - தெறிக்கும் புகைப்படங்கள்....

;

By :  adminram
Published On 2021-08-26 09:40 IST   |   Updated On 2021-08-26 09:40:00 IST

தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என நடித்து வருகிறார். மேலும்,சினிமா மட்டுமில்லாமல் வெப்சீரியஸ்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில், ஒரு பேய் காமெடி திரைப்படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் 'அன்னபெல்லா சேதுபதி'. இப்படத்தை தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். இவர் தமிழில் பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்ராஜனின் மகள் ஆவார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்சேதுபதியும், டாப்ஸியும் இணைந்து நடித்துள்ளனர். இதில், விசேஷம் என்னவெனில் இருவரும் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர். மேலும், யோகிபாபு, ராதிகா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Similar News