வா வாத்தியாரே! பாக்ஸிங்க விட இது ரத்தபூமி!... பசுபதியை வரவேற்ற ஆர்யா...
வா வாத்தியாரே! பாக்ஸிங்க விட இது ரத்தபூமி!... பசுபதியை வரவேற்ற ஆர்யா...
;தூள் திரைப்படத்தில் டெரர் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் பசுபதி. கூத்துப்பட்டறையில் கலை பயின்றவர். இவரின் வித்தியாசமான முகம் ரசிகர்களை கவர பல திரைப்படங்களிலும் வில்லனாக நடித்தார். ஆனாலும், விருமாண்டி, வெயில், மும்பை எக்ஸ்பிரஸ், குசேலன், அரவாண், ஈ உள்ளிட்ட சில படங்களின் அவரின் நடிப்பு ரசிகர்களிடம் பேசப்பட்டது. அதன்பின் சமீபத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் அவர் ஏற்ற ரங்கன் வாத்தியார் வேடம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது.
சைக்கிளை ஆர்யா ஓட்ட பின்னால் பசுபதி அமர்ந்திருக்கும் புகைப்படம் ஆயிரக்கணக்கான மீம்ஸ்களை உருவாக்கி சமூகவலைத்தளங்களில் வைரலானது. டிவிட்டரில் இவர் பெயரில் பல போலி கணக்குகளும் உலா வந்தது.
இந்நிலையில், நடிகர் ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் பசுபதியின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் கணக்கை பகிர்ந்து ‘ வாத்தியாரே இதான் டிவிட்டர். பாக்ஸிங்க விட ரத்தபூமி. உன்னோட பேர்ல இங்க நிறைய பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சதும் ஒரிஜினல் நான்தான்டான்னு உள்ள வந்த பாத்திரியா.. உன் மனசு மனசுதான். வா வாத்தியாரே! இந்த உலகத்துள்ளுக்குள்ள போவோம்’ என சைக்கிளில் அவரை வைத்து ஓட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதற்கு பதில் கூறியுள்ள பசுபதி ‘ஆமாம் கபிலா பாக்சிங்கே உலகம்னு இருந்துட்டேன். பரம்பரைக்கு ஒன்னுன்னா மொத ஆளா வந்திருவேன். நான் உன் சைக்கிள்ளயே பின்னாடி உட்கார்ந்திருக்கேன். என்ன எல்லா இடத்துக்கும் கூட்டிட்டிடு போ’ என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
Amam.. kabila, boxinge ulagamnu irunthutten, parambaraikku onnuna modha aala vandhuruven,naan vun cycle laye pinnadi okkandhukiren, enna ella edathukkum kootikinu po https://t.co/bkzzUBrKpc
— Pasupathy Masilamani (@PasupathyMasi) August 26, 2021