பயோபிக் கூட இவ்வளோ ஜம்முனு இருக்கே… துல்கர் சல்மானின் காந்தா டீசர் எப்படி இருக்கு?
Kaantha: தமிழ் சினிமாவில் பயோபிக் படங்களுக்கு எப்போதுமே ஒரு வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான பயோபிக் படமான காந்தா டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.
மலையாளத்தில் சூப்பர் நாயகனாக இருந்து வருபவர் துல்கர் சல்மான். பல மொழிகளில் கொடிக்கட்டி பறந்துவரும் தற்போது நடித்து வரும் திரைப்படம் காந்தா. இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டாரான தியாகராஜ பாகவதர் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.
1937ல் சிந்தாமணி திரைப்படம் ஒரு வருடம் ஓடியது. அப்படி தொடங்கிய பாகவதராக துல்கர் நடித்து இருக்கிறார். இப்படத்தினை செல்வமணி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். துல்கர் மற்றும் ரானா டகுபதி இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.
லக்கி பாஸ்கர் படத்தின் வெற்றியை தொடர்ந்து காந்தா படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் 2 நிமிடம் 12 நொடியில் தயாராகி இருக்கிறது. இப்படத்தின் சென்சார் யூஏ எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தற்போது வெளியாகி இருக்கும் டீசரில், படக்குழு ஹாரர் படத்தினை ஷூட் செய்ய இருப்பதாக சொல்கின்றனர். சமுத்திரக்கனி முதல் ஷாட்டை எடுக்கிறார்.
உடனே காட்சி துல்கர் கேரக்டரை காட்டுகிறது. மேலும் சமுத்திரக்கனி மற்றும் துல்கருக்கு இடையே பழைய பிரச்னை இருக்கிறது. இதனால் இருவரும் ரொம்ப நாட்கள் பேசாமலே இருக்கின்றனர். பின்னர் இருவருக்கும் ஒரு சண்டை காட்சியும் டீசரில் இடம்பெற்றுள்ளது.
மகாநடி, தலைவி படங்களின் பயோபிக்கை தொடர்ந்து காந்தா தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படம் வரும் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், அதே நாளில் சிவகார்த்திகேயனின் மதராஸி படமும் ரிலீஸ் செய்யப்பட இருப்பதால் இருவரும் மீண்டும் ஒருமுறை மோத இருக்கின்றனர்.