கேஜிஎஃப் 2 - வுக்கு ரூ.250 கோடிக்கு ஆஃபர்! - ஓடிடியா? தியேட்டரா?...

கேஜிஎஃப் 2 - வுக்கு ரூ.250 கோடிக்கு ஆஃபர்! - ஓடிடியா? தியேட்டரா?...

;

By :  adminram
Published On 2021-08-11 18:52 IST   |   Updated On 2021-08-11 18:52:00 IST

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே.ஜி.எஃப். படம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் ரீச்சானது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளில் இப்படம் வரவேற்பை பெற்றது. தற்போது கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு பின் பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ என்கிற புதிய படத்தை பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில், கேஜிஎஃப் 2 படத்தை ரூ.250 கோடி வரை வாங்க ஓடிடி நிறுவனங்கள் போட்டி போடுகின்றனவான். ஆனால், இப்படம் தியேட்டரில் மட்டுமே என உறுதியாக கூறிவிட்டாராம் தயாரிப்பாளர்.

Similar News