நீளமான முடி...கூலிங்கிளாஸ்...இது மம்முட்டியா ஹிருத்திக் ரோஷனா?...அரண்டுபோன நெட்டிசன்கள்...

நீளமான முடி...கூலிங்கிளாஸ்...இது மம்முட்டியா ஹிருத்திக் ரோஷனா?...அரண்டுபோன நெட்டிசன்கள்...

;

By :  adminram
Published On 2021-08-17 13:40 IST   |   Updated On 2021-08-17 13:40:00 IST

மலையாள நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் மம்முட்டி. குறிப்பாக ரஜினியுடன் அவர் நடித்த ‘தளபதி’ திரைப்படம் அவரை மிகவும் பிரபலமாக்கியது.

அவருக்கு தற்போது 69 வயதாகிறது. ஆனால், உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். மேலும், முடியை நீளமாக வளர்த்து ஒரு நடுத்தர வயது நபர் போல் அவர் மிகவும் ஸ்டைலாக மாறியுள்ளார். கடந்த வருடம் எல்லோரும் கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருந்த போது அவர் வெளியிட்ட புகைப்படம் பலரையும் வாயை பிளக்க வைத்தது.

சில நாட்களுக்கு முன்பு நீண்ட முடி, தாடி, டீசர்ட் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

தற்போது மீண்டும் ஒரு அசத்தலான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நீளமான தலைமுடி, கூலிங்கிளாஸ், அரை கை சட்டை என 30 வயசு குறைந்தது போல் அவர் தோற்றமளிக்கிறார்.

Similar News