முடிஞ்சா என்னை கைது பண்ணுங்க! போலீசாருக்கு சவால் விடும் மீராமிதுன்...

முடிஞ்சா என்னை கைது பண்ணுங்க! போலீசாருக்கு சவால் விடும் மீராமிதுன்...

;

By :  adminram
Published On 2021-08-12 10:09 IST   |   Updated On 2021-08-12 10:09:00 IST

சில அழகிப்பட்டங்களை வாங்கியுள்ள மீரா மிதுன் சினிமாவில் ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரிலும் சிக்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். மேலும், நடிகர் சூர்யா, விஜய்,ஜோதிகா, திரிஷா ஆகியோரை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அதோடு, தமிழ் சினிமா நடிகைகள் தன்னை பின்பற்றி போட்டோஷூட் நடத்துவதாக தொடர்ந்து கூறி வருகிறார்.

சமீபத்தில், தலித் சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள்தான் என்னை அதிகம் காப்பி அடிக்கின்றனர். அவர்களை திரையுலகில் இருந்தே துரத்த வேண்டும் என்று அவரது ஆண் நண்பருடன் சேர்ந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். எனவே, இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறி வந்த நிலையில், அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனவே, கைது செய்யப்பட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானதாகவும் செய்தி வெளியானது. அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என் குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த மீராமிதுன் ‘என்னை தாராளமாக கைது செய்யுங்கள்.. காந்தி, நேரு எல்லாம் சிறை செல்லவில்லையா?. ஆனால், என்னை கைது செய்ய முடியாது. அப்படி நடந்தால் அது கனவில்தான் நடக்கும்’ என அவர் திமிராக பேசியுள்ளார். அவரின் இந்த கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Similar News