பல கோடி நஷ்டம்!... பஞ்சாயத்தில் சிக்கிய சிம்பு படம்...

பல கோடி நஷ்டம்!... பஞ்சாயத்தில் சிக்கிய சிம்பு படம்...

;

By :  adminram
Published On 2021-08-26 08:20 IST   |   Updated On 2021-08-26 08:20:00 IST

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். பல தயாரிப்பாளர்களிடம் முன் பணம் வாங்கி விடுவார். ஆனால், கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடிப்பார். படப்பிடிப்பு சரியாக செல்லாமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்துவார். படம் பாதியில் இருக்கும்போது சம்பளத்தை சேர்த்துக்கேட்டு தயாரிப்பாளரை கதற விடுவார். டப்பிங் பேச செல்ல மாட்டார். ஆனால், இது எதுவும் தெரியாமல் அவருக்கெனெ ஒரு ரசிகர் கூட்டம் எப்போதும் உண்டு. எனவே, அவரின் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

இவரால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டாலும், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பல கோடி நஷ்டம் அடைந்தார். முதலில் 2 பாகம் என துவங்கி படம் திடீரென 2 பாகம் வேண்டாம். அதற்கு பதில் நான் வேறு படத்தில் நடித்துக்கொடுக்கிறேன். எடுத்தவரை ரிலீஸ் செய்துவிடுங்கள் என அவரிடம் சிம்பு கூற வேறுவழியின்றி அவரை நம்பி தயாரிப்பாளர் படத்தை வெளியிட அது சூப்பர் பிளாப் ஆனது.

இதில் தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம். மேலும், அதன்பின் அவருக்கு சிம்பு கால்ஷீட்டும் கொடுக்கவில்லை. கேட்டால் எனக்கு சம்பள பாக்கி என சிம்பு கூற, மைக்கேல் ராயப்படன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க, அது தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் சிம்பு செல்லவில்லை. எனவே, அவருக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது. ரெட் கார்டு எனில் ஒத்துழையாமை. அவரின் படத்திற்கு யாரும் ஒத்துழைக்க மாட்டோம் என்பதுதான் ரெட்கார்டு..

ஆனாலும், அவரின் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸின் போது உட்கார்ந்து பேசி அடுத்த படத்தில் பேசிக்கொள்வோம் என பஞ்சாயத்து பேசியே அவரின் படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படமும் பிரச்சனையில் சிக்கியது. தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பை மீறி பெப்சி சங்கம் அப்படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு கொடுக்க, ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில் பல பஞ்சாயத்துக்கள். மேலும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சி தொழிலாளர் அமைப்புக்கும்ம் இடையே மோதல் எழுந்தது. அதன்பின் இதில் சிம்புவின் தாய் உஷா தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.

இந்நிலையில், சிம்பு மீது விதிக்கப்பட்ட ரெட்கார்டை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து ‘வெந்து தணிந்தது காடு' படத்துக்கு பெப்சி தொழிலாளர் சங்கம் ஒத்துழைப்பு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News