ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி

இந்த வழக்கில் அவர்கள் இருவர் மீதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.�

;

By :  adminram
Published On 2021-08-24 14:25 IST   |   Updated On 2021-08-24 14:25:00 IST

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வரும் நடிகை நிக்கி கல்ராணி, இவரின் உடன் பிறந்த அக்கா சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட திரையுலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.

இதனிடையே போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் அதனை விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருந்ததாக நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திவேதி சென்ற வருடம் கைதாகினர்.

மேலும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நான்கு மாதம் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறைவாசத்திற்கு பிறகு அவர்கள் ஜாமினில் வெளியே வந்தனர்.

இந்நிலையில் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தினார்களா என்பதை கண்டறிய, அவர்களது தலைமுடி மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நடிகைகளின் தலைமுடி மாதிரியை ஆய்வு செய்த‌தில் அவர்கள் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது.

இதனால் தற்போது இந்த வழக்கில் அவர்கள் இருவர் மீதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Similar News