பாவடை போட்டிருக்குற இந்த தம்பி யாரு...? அட சொல்லுமா ஷாலு!
ஆண் ஒருவருடன் போஸ் கொடுத்து கலாய் வாங்கிய ஷாலு ஷம்மு!
�
காமெடி நடிகையாக அறிமுகமாகி பின்னர் கவர்ச்சி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
முதல் படத்திலே சூரிக்கு ஜோடியாக நடித்து நல்ல ரீச் ஆனார். அதையடுத்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் , திருட்டு பயலே 2 , ரெக்க உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இரண்டாம் குத்து என்கிற அடல்ட் காமெடி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் " A Brother From Another Mother" என கூறி ஆண் ஒருவருடன் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.
அதில் ஷாலு ஷம்மு குட்டை பாவாடை அணிந்துக்கொண்டும், அந்த நபர் பாவாடை போன்ற மாடர்ன் ட்ரஸில் போஸ் கொடுத்துள்ளதை நெட்டிசன்ஸ் வச்சு செய்து கலாய்த்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.