நடிகை கணவருடன் ஜோடி போடும் தமன்னா.. புது பட அறிவிப்பு....
நடிகை கணவருடன் ஜோடி போடும் தமன்னா.. புது பட அறிவிப்பு....
;தமிழ் சினிமாவில் மைதா மாவு தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்தவர் தமன்னா. கொஞ்சும் அழகிலும் நடிப்பாலும் பல வாய்ப்புகளை பெற்றார். பாகுபலி திரைப்படம் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. தமிழ், தெலுங்கு மொழி சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார் கடைசியாக தமன்னா நடிப்பில் 2019ம் ஆண்டு ஆக்ஷன் திரைப்படம் வெளியானது. அதன்பின் நவம்பர் ஸ்டோரீஸ் வெப் சீரியஸ் வெளியாகி வெற்றி பெற்றது.
தற்போது வாய்ப்பை பெற தமன்னா போராடி வருகிறார். அதற்கேற்ப, தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் எக்கசக்க புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மீண்டும் தமன்னா ஒரு ரவுண்டு வரவே அவர் ரசிகர்கள் விரும்புவதாக தெரிகிறது.
இந்நிலையில், தமன்னா நடிக்க உள்ள அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகரும் நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக் நாயகனாகவும், நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது ஒரு பாலிவுட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.