சூசைட் வீடியோ அனுப்பிய சூர்யா தேவி...கதவை உடைத்து சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி....

சூசைட் வீடியோ அனுப்பிய சூர்யா தேவி...கதவை உடைத்து சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி....

;

By :  adminram
Published On 2021-08-25 14:29 IST   |   Updated On 2021-08-25 14:29:00 IST

டிக்டாக் ஆப் மூலம் பிரபலமானவர்களில் முக்கியமானவர்கள் 3 பேர். ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா மற்றும் சூர்யா தேவி. இவர்கள் ஒருபக்கம் வீடியோ வெளியிடுவதோடு மட்டுமில்லாமல் ஒருவருக்கொருவர் சண்டை போட்டும் கொண்டனர். துவக்கத்தில் ஜிபி முத்துவும், ரவுடி பேபி சூர்யாவும் இணைந்து வீடியோ வெளியிட்டனர். அதன்பின் இருவரும் சண்டை போட்டுக்கொண்டு பரம எதிரிகள் போல் மாறினர். அதேபோல், வனிதா விஜயகுமாரின் விவகாரத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைந்து சர்ச்சையில் சிக்கியவர் சூர்யா தேவி. அவர் மீது வனிதாவும் புகார் அளித்தார்.

இந்நிலையில், ரவுடி பேபி சூர்யாவின் ஆண் நண்பர் சிக்கந்தர் என்பவர் சமீபத்தில் சூர்யா தேவி மீது புகாரளித்தார். எனவே, சூர்யா தேவியை போலீசார் தேடி வந்தனர். தான் தேடப்படுவதை அறிந்த சூர்யா தேவி, தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், இனிமேல் உயிர் வாழ விருப்பமில்லை நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் எனக்கூறி அந்த வீடியோவை மதுரை காவல் ஆணையர் அலுவகத்தில் அனுப்பினார்.

எனவே, போலீசார் பதறியடித்துக்கொண்டு அவரின் வீட்டிற்கு சென்றனர். கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. எனவே, தீயணைப்பு போலீசாரை வரவழைத்து கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். அப்போது, போலீசார் வந்தது கூட தெரியாமல் சூர்யா தேவி குறைட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்துள்ளார். போலீசார் எழுப்பிய போது எதுவும் தெரியாதது போல் படுக்கையில் இருந்து எழுந்துள்ளார். வாழவே பிடிக்கவில்லை எனக்கூறி கண்ணீர் விட்டு அழுது வீடியோ வெளியிட்டு விட்டு ஹாயாக அவர் தூங்கிக்கொண்டிருந்ததை கண்டு கடுப்பான போலீசார் அவரை எச்சரித்து அருகில் இருந்த அவரின் உறவினர் வீட்டில் அவரையும், அவரது மகனையும் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

வீட்டை விட்டு சூர்யா தேவி வெளியே வந்தபோது, அப்பகுதி மக்கள் அவரை திட்டித்தீர்த்தனர்.

Similar News