சினிமாவுக்கு வந்து 62 வருடங்கள்! - ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட விக்ரம் டீம்...

சினிமாவுக்கு வந்து 62 வருடங்கள்! - ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட விக்ரம் டீம்...

;

By :  adminram
Published On 2021-08-11 19:21 IST   |   Updated On 2021-08-11 19:21:00 IST

நடிகர் கமல்ஹாசன் 5 வயது முதல் சினிமாவில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரம், வாலிப வயது நடிகர், ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். நடிகர், இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களை எடுத்தவர். விதவிதமான கெட்டப்புகள் மீது தீரா காதல் உடையவர். தமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு எடுத்து சென்றதில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஜெமினி கணேசன் - சாவித்ரி நடித்த களத்தூர் கண்ணம்மா படத்தில் முதன் முதலாக குழந்தை நட்சத்திரமாக அவர் அறிமுகமானார். இந்த திரைப்படம் 1960ம் வருடம் ஆகஸ்டு 12ம் தேதி வெளியானது. எனவே, கமல்ஹாசன் சினிமாவில் நுழைந்து 62 வருடங்கள் ஆகிவிட்டது. எனவே, கமல் ரசிகர்கள் #62yearsofkamalism என்கிற ஹேஷ்டேக்கில் இதை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

எனவே, இதை கொண்டாடும் வகையில் விக்ரம் படக்குழு ஒரு புதிய போஸ்டரை அறிமுகம் செய்துள்ளது. ‘ஒருமுறை சிங்கம் எனில் அது எப்போதும் சிங்கம்தான்’ என கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

Similar News