இதலாம் ஒரு கதையா?!.. எஸ்கேப் ஆகிய விஜய்... கோட்டை விட்ட விஷால்....
இதலாம் ஒரு கதையா?!.. எஸ்கேப் ஆகிய விஜய்... கோட்டை விட்ட விஷால்....
;தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர் சுந்தர் சி. ரஜினியை வைத்து ‘அருணாச்சலம்’, கமல்ஹாசனை வைத்து ‘அன்பே சிவம்’, அஜித்தை வைத்து ‘உன்னை தேடி’, சிம்புவை வைத்து ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என முன்னணி நடிகர்கள் அனைவரையும் வைத்து படம் இயக்கியவர். கார்த்திக்கை வைத்து அதிக படங்களை இயக்கியுள்ளார்.
ஆனால், இதுவரை இவர் விஜயை வைத்து படம் இயக்கவில்லை. விஜயை வைத்து எப்படியாவது ஒரு படம் இயக்க வேண்டும் என பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார். 2 வருடங்களுக்கு முன்பு எப்படியோ விஜயின் அப்பாயின்மெண்டை வாங்கி ஒரு கதையை கூறியுள்ளார். கதையை கேட்ட விஜய், முதல் பாதி ஓகே, 2ம் பாதி நன்றாக இல்லை எனக்கூறி அவரை திருப்பி அனுப்பிவிட்டாராம்.. அதன்பின் அந்த கதையில் விஷாலை நடிக்க வைத்து அவர் இயக்கிய திரைப்படம்தான் ‘ஆக்ஷன்’. அப்படம் படுதோல்வி.
இந்த கதை தேறாது என தெரிந்துதான் விஜய் சுதாரித்துவிட்டார். ஆனால், விஷால் இதில் கோட்டை விட்டார். இந்த தகவலை வலைப்பேச்சு யுடியூப் சேனலில் கூறியுள்ளனர்.