அஜித்துக்கு வில்லனாக நடிக்கணும்! ஹீரோவா ஜெயிச்சுட்டு வர்றீங்க.. இப்போ எதுக்கு பாஸ்?

By :  Rohini
Update: 2024-12-16 07:40 GMT

ajith

வில்லனிசம்:

தற்போது சினிமாவின் ட்ரெண்டே மாறி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் முனைப்புடன் இருந்து வருகின்றனர். ஏனெனில் ஹீரோவாகவே நடித்து மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் வில்லன் என்ற கதாபாத்திரத்திற்குள் வரும் போது அவர்களின் மாஸ் இன்னும் மக்கள் மத்தியில் அதிகரிக்கும். அந்த ஒரு ரெஸ்பான்ஸை பெறுவதற்காகவே பல ஹீரோக்கள் முன்னணி நடிகர்கள் வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறார்கள்.

சமீப காலமாக லவ்வர் பாயாக காதல் மன்னனாக இருந்தவர்கள் எல்லாம் இப்போது வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். உதாரணமாக ஜெயம் ரவி, அருண் விஜய், அரவிந்த்சாமி என அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் ஹீரோவாக பல வெற்றி படங்களை கொடுத்து வில்லனாக களம் இறங்கி அவருக்கென ஒரு கோட்டையை கட்டி சிம்மாசனம் போட்டு அமர்ந்தவராக விஜய் சேதுபதி இருந்தார்.

மாஸ் காட்டிய விஜய்சேதுபதி:

அந்த அளவுக்கு வில்லனாக நடித்து மக்களிடையே பெரிய அளவில் ரீச்சை பெற்றார் விஜய் சேதுபதி. இதில் எந்த நடிகரும் தான் ஒரு முன்னணி கதாநாயகனாக இருக்கும் போது வில்லனாக நடிக்க ஆசைப்பட மிகவும் தயங்குவார்கள். அந்த வகையில் அஜித்தும் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் போதே மங்காத்தா படத்தில் ஒரு நெகட்டிவ் ஆன கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

மங்காத்தா படத்திற்கு பிறகு இப்போது வரை ரசிகர்கள் அனைவரும் மீண்டும் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அஜித்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த அளவுக்கு அவருடைய கதாபாத்திரத்தை அனைவரும் ரசித்தனர். மாஸ், கிளாஸ், ஸ்டைல், ஹீரோயிசம் என எல்லாம் கலந்த ஒரு வில்லத்தனமான கதாபாத்திரமாக அந்த படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் அமைந்தது.

அஜித்துக்கு வில்லனாக:

அப்படிப்பட்ட அஜித்துக்கு நான் வில்லனாக நடிக்க வேண்டும் என ஒரு நடிகர் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை நடிகர் அசோக் செல்வன். அவரிடம் நீங்கள் வில்லனாக நடித்தால் யாருக்கு வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அஜித் சார் என பதிலளித்திருந்தார் அசோக் செல்வன்.

அஜித் சாரை எனக்கு பர்சனலாக மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இந்த அளவுக்கு அவருடைய வளர்ச்சியை பார்த்து நான் பிரமித்து இருக்கிறேன். அதனால் அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என அந்த ஒரு பேட்டியில் கூறியிருந்தார் அசோக் செல்வன். அசோக்செல்வனை பொறுத்தவரைக்கும் அவர் சமீப காலமாக தேர்ந்தெடுத்து நடித்த வரும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.


அசோக் செல்வன் படம் என்றாலே தைரியமாக திரையரங்கிற்கு போகலாம். அந்த அளவுக்கு படத்தின் கதை திரைக்கதை அனைத்துமே இதுவரை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் பெற்றிருக்கிறது. இப்படி ஹீரோவாக ஜொலிந்து கொண்டிருக்கும் அசோக்செல்வன் அஜித்துக்கு வில்லனாக நினைக்க ஆசைப்பட்டிருக்கிறார். இந்த ஒரு செய்தி இப்போது வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News