விரைவில் சமந்தாவுக்கு இரண்டாவது திருமணம்!.. கொளுத்திப்போட்ட பயில்வான் ரங்கநாதன்!..

By :  Murugan
Update: 2024-12-16 10:52 GMT

Actress samantha: சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சமந்தா மாஸ்கோவின் காவேரி என்கிற படத்தில் தனது நடிப்பு பயணத்தை துவங்கினார். அதன்பின் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். தமிழில் விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

தெலுங்கில் நடிக்கும்போது நாக சைத்தன்யா மேல் காதல் வந்து அவரை திருமணமும் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில வருடங்களில் அவரை பிரிந்துவிட்டார். இருவருக்கும் என்ன பிரச்சனை என இருவருமே பொதுவெளியில் தெரிவிக்கவில்லை.


சமந்தாவின் விவாகரத்து ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. அவர் மீது பலரும் சேறை வாரி இறைத்தார்கள். புன்னகையுடன் அதை கடந்து போனார் சமந்தா. இப்போது திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவில் நடிப்பது, சுற்றுலா செல்வது, நண்பர்களுடன் நேரம் செலவிடுவது என மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.

ஒருபக்கம், தோல் வியாதியிலும் அவதிப்பட்டு வரும் அவர் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சையும் எடுத்து வருகிறார். 2024ம் வருடம் அவருக்கு சொல சோகங்களை கொடுத்தது. அவரின் நடிப்பில் எந்த திரைப்படமும் இந்த வருடம் வெளியாகவில்லை. அவரின் முன்னாள் கணவர் நாக சைத்தன்யா நடிகை சோபிதாவை திருமணம் செய்து கொண்டார்.


குறிப்பாக சமந்தாவின் அப்பாவும் மரணமடைந்தார். இப்படி பல சோகங்கள் தாக்கினாலும் நம்பிக்கையுடன் வாழ்கையை எதிர் கொண்டு வருகிறார் சமந்தா. இந்நிலையில், ஒரு புதிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. சமந்தாவின் அப்பா இறந்து பின் அவரின் தாய் மற்றும் சகோதரர்கள் என எல்லோரும் சமந்தாவிடம் அவரின் 2வது திருமணம் பற்றி பேசியிருக்கிறார்கள்.

இனிமேலும் இப்படி நீ தனியாகவே இருக்கக் கூடாது. விரைவில் நீ 2வது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்கள். அதோடு, தங்கள் உறவினர் வட்டாரத்திலேயே ஒரு நல்ல பையனையும் அவருக்கு பார்க்க துவங்கியிருக்கிறார்களாம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் யுடியூப் ஒன்றில் கூறியிருக்கிறார்.

Tags:    

Similar News