கோரிக்கைக்குப் பிறகு ட்ரெண்டை மாற்றிய அஜீத் ரசிகர்கள்.. அடங்க மாட்டாங்க போல

By :  Rohini
Update: 2024-12-11 05:41 GMT

ajithtrend

பைக் ரேஸ் ,படப்பிடிப்பு என மிகவும் பிசியாக இருந்த அஜித் நேற்று திடீரென சென்னை திரும்பினார். அவர் விமான நிலையத்தில் வரும் காட்சியை படம் பிடித்து அவருடைய ரசிகர்கள் அதை இணையத்தில் வைரலாக்கி வந்தனர். இந்த நிலையில் திடீரென நேற்று அஜித்திடமிருந்து ஒரு அறிக்கை வந்தது.


 அந்த அறிக்கையில் அவர் சமீப காலமாக முக்கியமான நிகழ்வுகளில் பொதுவெளியில் அநாகரிகமாக தேவையில்லாமல் எழுப்பப்படும் கடவுளே அஜித்தை என்று இந்த கோஷம் என்னை கவலை அடைய செய்திருக்கிறது. எனது பெயரை தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துணியும் உடன்படவில்லை.


 எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.

என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் அஜித்.

சமீப காலமாகவே கடவுளே அஜித்தே என கோஷமிட்டு பொது இடங்களில் ரசிகர்கள் இடையூறு தந்து வந்தனர். அதைக் கருத்தில் கொண்டே உடனடியாக சென்னை வந்ததும் இந்த அறிக்கையை வெளியிட்டார் அஜித். அந்த அறிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் அஜீத் ரசிகர்கள் செயல்பட்டு புதிய ட்ரெண்டை உருவாக்கி இருக்கின்றனர் .


அஜித் குறிப்பிட்ட அறிக்கையில் தன்னை தன் பெயர் வைத்து அழைத்தால் போதும் என குறிப்பிட்டிருந்தார். அதனால் கடவுளே அஜிதே இந்த அடைமொழியில் கடவுளே என்பதை மட்டும் எடுத்துவிட்டு அஜித்தே அஜித்தே என கூறி ஒரு கோயில் விழாவில் கும்பலாக கூச்சலிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.


 இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஒரு இரண்டு நாளைக்கு சும்மா இருங்கடா. இதை பார்த்துவிட்டு திரும்பவும் அறிக்கை விடுவாரு அஜித். அதில் தன் பெயரை பொதுவெளியில் பயன்படுத்தக்கூடாது என்று கூட சொல்லுவாரு என கிண்டல் அடித்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://x.com/CinemaWithAB/status/1866499545355710857?t=BL-6lwQ_u5HNCrIMikdo8A&s=08

Similar News