அஜித் ரேஸ் கார் நிறத்திற்கான பின்னணி இதுதானா? அப்போ விஜய்க்கு ஆதரவு இல்லையா?

By :  Rohini
Update: 2024-12-18 09:30 GMT

vijayajith

விஜய் அஜித்:

ஒரு பக்கம் விஜய் அரசியலில் முழுமூச்சாக இறங்க அஜித் அவருடைய கார் ரேஸில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். விஜய் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்திய பிறகு ரேஸுக்காக தான் பயன்படுத்தும் காரின் நிறத்தையும் அஜித்தும் வெளியிட்டார். அதிலிருந்து சில வதந்திகள் பரவ ஆரம்பித்தன. விஜயின் கட்சிக்கொடி சிவப்பு மஞ்சள் நிறத்தில் காணப்பட்டது. அதே மாதிரியான நிறத்தில் அஜித்தின் ரேஸ் காரும் காணப்பட்டது. அதனால் விஜய்க்கு ஆதரவாக தான் அஜித் மறைமுகமாக இந்த நிறத்தை பயன்படுத்தி இருக்கிறாரா என்ற விதத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதற்கு இடையில் வலைப்பேச்சு பிஸ்மி இது பற்றிய தெளிவான விளக்கத்தை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அஜித் அடுத்த வருடம் சின்னதாக பிரேக் எடுத்துக் கொண்டு உலக அரங்கில் 10 கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து போகிறார். இதில் முதல் போட்டியாக ஜனவரி மாதம் துபாயில் ஒரு கார் ரேஸ் நடக்கப்போகிறது. தன்னுடைய தலைமையில் ஒரு குழுவை வைத்து அஜித் அந்த பந்தயங்களில் எல்லாம் கலந்து கொள்ள போகிறார். அந்தப் பந்தயங்களில் அஜித் பயன்படுத்துகிற காரைப் பற்றி பல செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

பாரம்பரிய கலர்:

குறிப்பாக அந்த காரின் நிறங்களை பற்றி தான் பல வதந்திகள் கிளம்பின. பொதுவாகவே சிவப்பு மஞ்சள் பரவலாகவே எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிற ஒரு நிறம்தான். அந்த அடிப்படையில் தான் விஜயின் கட்சி கொடியில் கூட அந்த நிறத்தை விஜய் பயன்படுத்தி இருக்கிறார். சிவப்பும் சரி மஞ்சளும் சரி பளிச்சென்று நம் கவனத்தை கவரும். அதுதான் முக்கியமான காரணமாக இருக்கும் என பிஸ்மி கூறினார்.

இதை வைத்துதான் அந்த வதந்தியை உருவாகியே கொண்டிருக்கிறது. விஜய்க்கு அஜித் ஒரு ஆதரவை தெரிவிப்பதற்காக தான் அந்த நிறத்தை தன்னுடைய காரில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல 2026 சட்டமன்றத் தேர்தல் நடக்கும்போது விஜய்க்கு தன் ஆதரவை அஜித் நேரடியாக தர இருக்கிறார் என்றும் ஒரு வதந்தி பரவிக் கொண்டு வந்தது. ஆரம்பத்தில் இது ஒரு வதந்தி என கடந்து போக நினைத்தாலும் இதுவரை அதே மாதிரியான ஒரு பேச்சு தான் அடிபட்டுக்கொண்டு இருக்கின்றது .

மினியேச்சர்ஸ்:

அந்த நிறத்தை அவருடைய ரேஸ் காரில் பயன்படுத்தியதற்கான காரணம் என்ன என்பதை பற்றி இப்போது ஒரு தகவலை கூறி இருக்கிறார் பிஸ்மி. அதாவது முன்பு அஜித் அவருடைய அலுவலகத்தில் இருக்கும் டேபிளை போய் பார்த்தால் இதற்கு முன் பார்முலா ரேஸ் பந்தயங்களில் வீரர்கள் பயன்படுத்திய ஹெல்மெட்டுகளின் மினியேச்சர்களை வரிசையாக அடுக்கி வைத்திருப்பாராம்.


அது பல வண்ணங்களில் காணப்படுமாம். அந்த ஹெல்மெட்டுகளின் நிறங்களை எல்லாம் வைத்து தான் அஜித் தன்னுடைய ரேஸ் காரின் நிறத்தை வடிவமைத்திருக்கிறார் என ஒரு தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. இதற்கு இடையில் அந்த வதந்திகளை பற்றி நாம் கருத்தில் கொள்ளும்போது அஜித்தும் அப்படிப்பட்டவர் கிடையாது என்பது அனைவருக்குமே தெரியும். நேரடியாக எந்த ஒரு அரசியலிலும் தலையிடவும் பண்ண மாட்டார் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

Tags:    

Similar News