ஜெயிலர் 2 அப்டேட் வராததற்கு காரணம் அனிருத்தா? கடைசில தயாரிப்பு நிறுவனத்தையே அலறவிட்டாரே
ரஜினி:
ரஜினியின் பிறந்தநாள் கடந்த 12ம் தேதி கொண்டாடப்பட்டது. தன்னுடைய 73 வது வயதை நிறைவு செய்து 74வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார் ரஜினி. ரஜினி இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த வருட பிறந்த நாளின் போது ரஜினியின் இரண்டு படங்கள் குறித்த அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒன்று கூலி திரைப்படத்தின் அப்டேட் மற்றொன்று ஜெயிலர் 2 படத்தின் அப்டேட். ஆனால் பெரிய அப்டேட் என்று எதுவும் இல்லாமல் கூலி படத்தின் ஒரு சின்ன க்ளிம்ப்ஸ் வீடியோ மட்டும் வெளியாகி ஓரளவு ரசிகர்களை திருப்தி படுத்தியது. ஜெயிலர் 2 அப்டேட் என்ன ஆனது என அனைவரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். ஆனால் இதற்கு பின்னணியில் அனிருத் இருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.
ரஜினி - அனிருத் காம்போ வெற்றி:
ஜெயிலர்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலில் சாதனை படைத்தது. அதற்கு இன்னொரு காரணம் அனிருத் இசையில் அமைந்த பின்னணி இசை மற்றும் பாடல்கள். ரஜினிக்கு மட்டும் இல்லாமல் சிவராஜ்குமார் மோகன்லால் என ஒவ்வொருவருக்கும் பின்னணியில் ஹை பிட்ச்சில் பிஜிஎம்- ஐ ஏற்றி படத்தின் தரத்தையே மாற்றினார் அனிருத். பொதுவாக ரஜினியின் படங்களுக்கு என்றால் அனிருத் கையில் இருந்து எப்படி தான் இசை வருமோ தெரியவில்லை.
அந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிடும். அதேபோலத்தான் ஜெயிலர் திரைப்படத்திற்கும் வேட்டையன் திரைப்படத்திற்கும் என அடுத்தடுத்து பேக் டு பேக் ஹிட் கொடுத்தார் அனிருத். அதைப்போல இப்பொழுது கூலி திரைப்படத்திலும் அவருடைய இசை தான். அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்திற்கும் அவர்தான் இசை. ஆனால் ஜெயிலர் படத்தின் வெற்றியால் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு தனக்கு சம்பளமாக 17 கோடி வேண்டும் என அனிருத் கேட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கே ஷாக்கா?
இந்த சம்பளத்தை கேட்டதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் ஷாக்காகி விட்டார்களாம். 17 கோடி என்பது அதிகம் என சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அனிருத் அந்த சம்பளத்திலிருந்து மாறுவதாக இல்லையாம். அதனால் தான் ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ சூட் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஏனெனில் ப்ரோமோசூட் என ஆரம்பித்து விட்டால் முன்பாக அக்ரீமெண்ட் கையெழுத்துக்காக வேண்டும்.
அந்த அக்ரிமெண்டில் அனிருத் கேட்ட சம்பளத்திற்கு ஓகே சொல்ல வேண்டும். அதனால் இப்போது இந்த சம்பள விஷயத்தை கொஞ்சம் நிறுத்தி வைத்திருக்கிறார்களாம். இதன் காரணமாகத்தான் ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ ஷூட் எடுக்கப்படவில்லையாம். இதனால் தான் ரஜினியின் பிறந்த நாளின் போது ஜெயிலர் 2 படம் குறித்த அப்டேட் வெளியாகவில்லை என தகவல் கிடைத்துள்ளது.