பெரிய அப்பாடாக்கரா? கோவா கல்யாணத்துக்கு போற.. விஜயை சீண்டிய கூல் சுரேஷ்

By :  Rohini
Update: 2024-12-19 10:43 GMT
coolsuresh

நேற்று வனங்கான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கூடவே இயக்குனர் பாலா இந்த திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி அவரை கௌரவப்படுத்தும் விதமாக திரைப்படத்துறையில் உள்ள முக்கியமான இயக்குனர்களும் அந்த விழாவில் கலந்து கொண்டனர். இதில் கூல் சுரேஷும் கலந்து கொண்டார்.

அப்போது கூல் சுரேஷிடம் புஷ்பா 2 படத்தின் முதல் நாள் காட்சியை பார்க்கப் போன இடத்தில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தை பற்றி கேள்வி எழுப்பினர். அப்போது கொதித்து எழுந்து மொத்த ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்தார் கூல் சுரேஷ். புஷ்பா 2 திரைப்படம் ஆயிரம் கோடியை தாண்டினாலும் சரி 2000 கோடியை தாண்டினாலும் சரி. அந்த படத்தை பார்க்க போன ஒரு பெண் உயிரிழந்திருக்கிறார்.

அதனால் அந்த படத்தின் ஹீரோவான அல்லு அர்ஜுனை கைது செய்து ஒரு நாள் சிறையில் வைத்து மீண்டும் ஜாமினில் விடுதலை செய்தது. அவர் விடுதலை ஆனதை அறிந்த ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாவும் அவர் வீட்டின் முன் குவிந்தனர். அத்தனை பெரிய நடிகர்களும் அல்லு அர்ஜுனை பார்க்க சென்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் வீட்டிற்கு யாராவது சென்றார்களா அல்லது அந்த பெண்ணின் மகன் மூளைச் சாவு அடைந்து, இருந்தும் இல்லாமலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

அவனை பார்த்து ஆறுதல் கூற யாராவது போனார்களா ?இழப்பீடு மட்டும் கொடுத்தால் போதுமா? இது எந்த நடிகராக இருந்தாலும் சரி. ரஜினியாகட்டும் கமல் ஆகட்டும் விஜய் அஜித் யாரா வேணாலும் இருக்கட்டும். பெரிய அப்பாடக்கரா இருக்கட்டும். யாரா இருந்தாலும் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் இன்று காரில் போவதற்கு காரணமே இந்த ரசிகர்கள் தான். ரசிகர்கள் இல்லாமல் நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா ?


பெரிய பெரிய சொகுசு காரில் போக முடியுமா? தனி விமானத்தில் போக முடியுமா? கோவா கல்யாணத்துக்கு தான் போக முடியுமா ?அதனால் ரசிகர்கள் இல்லை என்றால் நீங்கள் இல்லை. அந்த ரசிகர்களை எப்படி நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ் ரசிகர்கள் அவர்களுடைய நடிகர்களை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள். அதனால் தமிழ் ரசிகர்கள் மிகவும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என கிடைத்த கேப்பில் விஜயையும் சீண்டியிருக்கிறார் கூல் சுரேஷ்.

ஏனெனில் விஜய் தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்திற்கு சென்று மக்களை சந்திக்காமல் கீர்த்தி சுரேஷின் கல்யாணத்திற்கு மட்டும் சென்றிருந்தது பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது. அதனால் அதை குறிப்பிட்டு பேசியிருக்கிறார் கூல் சுரேஷ்.

இதையும் படிங்க: விஜய்னா யாருன்னு கேட்ட சூப்பர்ஸ்டார்.... தயாரிப்பாளர் சொன்ன அந்தத் தகவல்

Tags:    

Similar News