தனுஷுக்கு வில்லனாக களமிறங்கும் தேசப்பற்று நடிகர்.. புது காம்போதான்.. ஆனால் ஒரு சிக்கல்

By :  Rohini
Update:2025-02-17 19:23 IST

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இப்போது இயக்குனராகவும் தன்னுடைய படைப்புகளால் ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகிறார். இவர் முதன் முதலில் இயக்கிய படமான பவர் பாண்டி திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. அதில் தனுஷும் நடித்திருந்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ராயன் திரைப்படம் மூலம் இயக்குனராக களமிறங்கினார்.

அந்தப் படத்தில் வெற்றிமாறனின் சாயல் தனுஷிடம் தெரிந்தது. அப்படிப்பட்ட படைப்பை கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் தனுஷ் .படம் முழுவதும் ஒரே வன்முறை காட்சிகள் நிறைந்ததாக இருந்தன. இருந்தாலும் படம் ஓரளவு வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடியது. இதற்கு அடுத்தபடியாக மீண்டும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கினார்.

முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு வித்தியாசனமான காதல் சப்ஜெக்ட் உள்ள படம்தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல ஒரு ரீச்சை பெற்றிருக்கிறது. இது வரும் 21 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. இதற்கிடையில் இட்லி கடை என்ற படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ். இதில் ஹீரோவாகவும் தனுஷ் நடிக்கிறார்,

இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். அருண்விஜய் வில்லனாக நடிக்கிறார். ஏப்ரல் மாதம் படம் ரிலீஸாகும் நிலையில் இந்தப் படத்திற்கு பிறகு தனுஷ் போர்த்தொழில் பட இயக்குனருடன் இணைய இருக்கிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு வில்லனாக அர்ஜூனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. ஏற்கனவே விடாமுயற்சி படத்தில் அர்ஜூனுக்கு 7 கோடி சம்பளம் பேசப்பட்டது,


தனுஷுடன் நடிக்கும் படத்தில் அதிக சம்பளம் கேட்பதாக தெரிகிறது. இந்தப் படத்தை ஐசரி கணேஷ்தான் தயாரிக்க இருக்கிறார். அதனால் அர்ஜூன் கேட்கும் சம்பளத்தை கொடுக்க ஐசரி கணேஷ் தயங்குவதாகவும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News