இந்த முறை புது அவதாரம் எடுக்கும் காஞ்சனா பேய்.. ‘காஞ்சனா 4’ல் இவங்களா பேயா நடிக்கிறாங்க?
பேய் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு வரைமுறையை மாற்றியவர்களில் இரண்டு பேர் குறிப்பிடத்தக்கவர்கள். ஒன்று சுந்தர் சி மற்றொருவர் ராகவா லாரன்ஸ். இருவருமே பேய் சம்பந்தப்பட்ட கதைகளை மையமாக வைத்து வரிசையாக படங்களை எடுத்து வருகின்றனர். அதிலும் நகைச்சுவை கலந்த பேய் படங்கள் என்றால் குழந்தைகளும் விரும்பி பார்ப்பார்கள் என்பதை நன்றாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நகைச்சுவையையும் சேர்த்து ஒரு திரில்லர் படமாகவும் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் வரிசையாக நான்கு பாகங்களை கடந்து விட்டது. அந்த நான்கு பாகங்களுமே மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதைப்போல லாரன்ஸ் நடிப்பில் காஞ்சனா திரைப்படம் வரிசையாக மூன்று பாகங்களை வெற்றிகரமாக கடந்து இப்போது நான்காவது பாகத்தில் அடி எடுத்து வைக்கிறது. காஞ்சனா 4 திரைப்படத்தின் அப்டேட் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
வெளியான காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களிலுமே லாரன்ஸ் தான் பேயாக மெயின் ரோலில் நடித்திருப்பார். அதைப்போல காஞ்சனா 4 திரைப்படத்திலும் அவர்தான் பேயாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை காஞ்சனா4 திரைப்படத்தில் பேயாக நடிப்பது ஒரு நடிகை என்பது தெரியவந்துள்ளது. அவர் வேறு யாருமில்லை. நடிகை பூஜா ஹெக்டே.
ஏற்கனவே காஞ்சனா 4 திரைப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார் என்ற ஒரு தகவல் வெளியானது. ஆனால் இப்போது அந்த படத்தின் பேயே பூஜா ஹெக்டேதான் என்ற ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியா, ஹன்சிகா, திரிஷா போன்றவர்கள் பேயாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கின்றனர். அந்த வகையில் பூஜா ஹெட்டேவும் இப்போது பேயாக காஞ்சனா 4 படத்தில் நடிக்க இருக்கிறார்.
ஏற்கனவே லாரன்ஸ் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அது முடிந்ததும் காஞ்சனா 4 படத்தை லாரன்ஸ் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து ஹாரர் படங்களாக காஞ்சனா என்ற பெயரில் வெற்றிப்படங்களாக கொடுத்து வரும் லாரன்ஸ் காஞ்சனா 4 படத்தையும் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.