லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பொருந்தமான நடிகை அவர் மட்டும்தான்.. நயன் இல்லை! அடுத்த பஞ்சாயத்தா?
தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. திரைத்துறையில் நடிகர் நடிகைகள் மிகப்பெரிய பிரபலங்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களை சுற்றி பல விமர்சனங்களும் வரத்தான் செய்யும். அப்படித்தான் நயன்தாராவை சுற்றியும் வந்து கொண்டு இருக்கின்றன. இதில் நயன்தாராவின் போக்கும் சமீபகாலமாக மாறியிருப்பதையும் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் இவர் ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தன் மீது வந்து விழும் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில விஷயங்களை பேசியிருந்தார். ஒரு மூன்று பேர் இருக்கிறார்கள். என் அருகில் இருந்து பார்த்ததை போலவே பேசுகிறார்கள். கெட்டதை பார்க்காதே, கெட்டதை பேசாதே, கெட்டத்தை கேட்காதே என்பதை விளக்கும் விதமாக குரங்கு சிலையை வைத்திருப்போம்.
அந்த குரங்குக்கு எதிரானவர்கள் இந்த மூன்று பேர் என வலைப்பேச்சு சேனலை டேக் செய்து பேசியிருப்பார். அதிலிருந்தே வலைப்பேச்சு சேனலுக்கும் நயன் தாராவுக்கும் இடையே பூகம்பம் கிளம்பியது. இதில் பிஸ்மி, அந்தணன் என மாறி மாறி இருவரும் நயன் தாராவை பற்றியும் விக்னேஷ் சிவனை பற்றியும் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு சற்றும் பொருத்தமில்லாதவர் நயன்.
அந்தப் பட்டத்துக்கு மிகவும் பொருந்தக் கூடியவர் விஜயசாந்தி மட்டும்தான் என பிஸ்மி கூறியிருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை நயனுக்கு கொடுத்ததே விக்கிதான் என்று சொல்லலாம். ஏனெனில் எந்த படமானாலும் அதில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் கண்டிப்பாக போடவேண்டும் என்று அக்ரிமெண்டில் குறிப்பிட்டுத்தான் படத்தில் கையெழுத்தே போடுகிறார் நயன் என பிஸ்மி கூறினார்.
இதில் அண்ணாத்த படத்தில் தன் பேருக்கு முன் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை போட வேண்டும் என நயன் சன் பிக்சர்ஸிடம் கோரிக்கை வைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்த் படத்தில் வேறு யாருக்கும் பட்டம் போடுவதில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதன் பிறகு சிறுத்தை சிவாவிடம் சொல்லி பட்டத்தை போட வைத்திருக்கிறார் நயன். ஏன் சமீபத்தில் ரஜினியின் பிறந்த நாளுக்கு அனைவரும் வாழ்த்துக்கள் சொன்னார்கள்.அனைவருமே சூப்பர் ஸ்டார் என்று சொல்லித்தான் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள். ஆனால் நயன் தாரா மட்டும் ரஜினி காந்த் என்று டேக் செய்து வாழ்த்தை தெரிவித்தார். அதற்கு காரணம் நானும் சூப்பர் ஸ்டார், நீங்களும் சூப்பர் ஸ்டார். அப்புறம் எதுக்கு இத சொல்லிக்கிட்டு என்று நினைத்து கூட நயன் அந்த வாழ்த்தில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தவிர்த்திருப்பார் என பிஸ்மி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.