கூலி படத்திற்கு பிறகு சுயசரிதையை எழுதும் முயற்சியில் ரஜினி.. பொன்விழா ஆண்டில் இப்படி ஒரு திட்டமா?
தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வேட்டையன். அந்தப் படம் ஒரு ஆக்சன் கமர்ஷியல் படமாக வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகப்படுத்திய திரைப்படமாக அமைந்தது.
கிட்டத்தட்ட 50 வருடமாக சூப்பர் ஸ்டார் என்ற ஒரு புகழோடு இன்று வரை ரசிகர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த். இவருடைய சாதனைகள் போராட்டங்கள் கடின உழைப்பு விடாமுயற்சி என அனைத்தையும் அடுத்து வரும் இளம் தலைமுறை நடிகர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த அளவுக்கு கிடை மட்டத்திலிருந்து வந்து இன்று ஒரு மாபெரும் ஆளுமையாக உயர்ந்திருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் கிடையாது. கூலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினி அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற ஒரு ஆர்வம் அனைவருக்கும் இருக்கும். அந்த வகையில் கூலி படத்தை முடித்த கையோடு மூன்று மாதம் அவர் ஓய்வு எடுக்கப் போவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அடுத்த மாதம் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிய இருக்கிறதாம். அதிலிருந்து ஒரு மூன்று மாதம் அவர் ஓய்வெடுக்கப் போவதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் எப்போதுமே பரபரப்பாகவே இருக்கும் ரஜினி அந்த ஓய்வு நேரத்தில் கூட தன்னுடைய சுயசரிதையை எழுதும் முயற்சியில் இறங்கப் போவதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே தன்னுடைய சுயசரிதையை எஸ் ராமகிருஷ்ணன் உதவியுடன் எழுதினாராம் ரஜினிகாந்த்.
ஆனால் ஒரு வாரம் அந்த சுயசரிதையை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென ரஜினி அதை நிறுத்த சொல்லிவிட்டாராம். ஏனெனில் சுயசரிதை என்றால் தன் வாழ்வில் நடந்த அத்தனை சம்பவங்களையும் சொல்ல வேண்டும். அதில் பொய் என்பதற்கு இடமே இருக்கக் கூடாது. இதை எல்லாம் மனதில் வைத்து இன்னொரு சமயத்தில் எழுதிக் கொள்ளலாம் என நிறுத்திவிட்டாராம் ரஜினி.
அதை இப்போது கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்த சுயசரிதையை அவரே எழுதப் போகிறாரா அல்லது மீண்டும் எஸ் ராமகிருஷ்ணனை வைத்து தான் எழுதப் போகிறாரா என்பது தெரியவில்லை. எப்படியோ அவருக்கு இந்த வருடம் தான் பொன்விழா ஆண்டு. சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் தன்னுடைய சுயசரிதையை எழுத ஆரம்பிப்பது அனைவருக்குமே ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.