‘படையப்பா 2’க்கு லீடு கொடுத்த ரவிக்குமார்.. நீலாம்பரிக்கு சரியான ஆள செலக்ட் பண்ணிட்டாரே

By :  Rohini
Update: 2024-12-16 10:58 GMT

ramyakrishnan

படையப்பா:

1999 ஆம் ஆண்டு ரஜினியின் நடிப்பில் வெளியான திரைப்படம் படையப்பா. இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கினார். தேனப்பன் படத்தை தயாரித்து இருந்தார். இந்த படத்தில் சிவாஜி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கூடவே சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், நாசர் என பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர் .ஒரு அதிரடி குடும்பத்திரைப்படமாக இந்த படம் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் மிகவும் திமிரான பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்திருந்தார், இதில் ரம்யா கிருஷ்ணனை நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு சிபாரிசு செய்ததே ரஜினி தான் என நம் அனைவருக்கும் தெரியும் ,ஒரு பவர்ஃபுல்லான கேரக்டராக அது அமைந்திருக்கும், ரம்யா கிருஷ்ணன் படையப்பாவான ரஜினியை அவ்வப்போது சீண்டுவதும் கோபப்படுத்துவதும் என காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கும்,

படையப்பா 2:

இந்த நிலையில் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையாக இருப்பது படையப்பா படத்தின் இரண்டாம் பாகம் வருமா வராதா என்பதுதான், ஆனால் அதற்கான எண்ணத்தில் கே எஸ் ரவிக்குமார் இப்போது இருக்கிறார் என சமீபத்திய ஒரு பேட்டியில் தெரிய வந்திருக்கிறது, விஜய் சேதுபதி,சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்கும் திரைப்படம் விடுதலை 2. இந்த படம் வரும்20ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அந்தப் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்து கொண்டு வருகின்றன.

அந்தப் படத்தைப் பற்றியும் தன் அனுபவங்களை பற்றியும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சுவாரியார் ஒரு பேட்டியில் விளக்கமாக கூறியிருக்கிறார்கள். அவர்களை பேட்டி எடுத்ததே கே எஸ் ரவிக்குமார் தான். அப்போது மஞ்சு வாரியரிடம் ரவிக்குமார் நீங்கள் கதையின் நாயகியாக நடிக்க விரும்புகிறீர்களா அல்லது எந்த கேரக்டர் கொடுத்தாலும் ஓகே என்ற மனநிலையில் இருக்கிறீர்களா என்று கேட்டபோது அதற்கு மஞ்சு வாரியர் எந்த கேரக்டர் ஆனாலும் பரவாயில்லை.

நீலாம்பரி:


முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என கூறினார். உடனே கே எஸ் ரவிக்குமார் படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டர் மாதிரி என அவர் கேள்வி கேட்கும் போது அந்த மாதிரி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன் என அந்த படத்தை பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாம். ஆனால் நீலாம்பரி கேரக்டர் அந்த படத்தில் இறந்து போயிடுவாங்க.

சாகும்போது அடுத்த ஜென்மத்துலயாவது உன்னை அடைந்தே தீருவேன் என சொல்லிட்டு சாவாங்க, ஆனா ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு அவங்க சட்னியும் சாம்பாரும் ஊத்திக் கொண்டிருப்பாங்க என நக்கலாக கூறினார் கே எஸ் ரவிக்குமார். ஆனால் அடுத்த ஜென்மம் அப்படின்னு வைத்து கதையை தொடங்கலாம் என கூறும் போது விஜய் சேதுபதி நீங்க எழுதுறது தானே கதை சார். எடுக்கலாம் என கூறுவார். அதற்கு ரவிக்குமாரும் ஓகே பாப்போம் என சொல்லி இருப்பார். இதன் மூலம் மஞ்சுவாரியரை வைத்து நீலாம்பரி கேரக்டரில் படையப்பா 2 படத்தை ஒருவேளை எடுக்க வாய்ப்பு இருக்கிறது என கோடம்பாக்கத்தில் இப்போது ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்கின்றது.

Tags:    

Similar News