ஹீரோ உருவாவது சாதாரண விஷயமா? விஜயை இப்படித்தான் புரோமோட் பண்ணேன்.. எஸ்ஏசி பேட்டி
நடிகர் விஜய்: இப்போது தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருப்பவர் நடிகர் விஜய் இவரை இந்த சினிமாவிற்கு கொண்டு வந்தவர் அவருடைய அப்பாவான கேஸ் ஏ சி விஜய் வைத்து கிட்டத்தட்ட ஏழு படங்களுக்கு மேல் அவர் இயக்கியிருக்கிறார் நாளைய தீர்ப்பு, ரசிகன், மாண்புமிகு மாணவன், தேவா என வரிசையாக விஜயை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கியவர் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர்.
பட்ட கஷ்டம்: விஜய் தான் ஒரு பெரிய இயக்குனரின் மகன் என்று ஈஸியாக சினிமாவில் வந்துவிட வில்லை. அவரும் மற்ற ஹீரோக்களை போல் சினிமா என்றால் என்ன? எப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவது என்பதை நன்கு அறிந்து கஷ்டப்பட்ட பிறகுதான் வந்திருக்கிறார். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கடுமையான விமர்சனத்திற்கும் ஆளானவர் விஜய்.
எஸ்.ஏ.சி பகிர்ந்த தகவல்: இந்த நிலையில் விஜயின் தந்தை சந்திரசேகர் இப்போது கூரன் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது ஒரு ஹீரோ உருவாவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. என் மகனை நான் எந்தளவு ப்ரோமோட் செய்தேன் என்பதை பற்றி கூறியிருக்கிறார் சந்திரசேகர்.
சொல்லமாட்டேன்: ஒரு பெரிய இயக்குனருடைய இயக்கத்தில் ஒரு ஹீரோ நடித்து அந்தப் படம் ஓடுது. அப்படி என்றால் அடுத்த படம் என்ன ஆகும்? அதாவது அந்த ஹீரோ நடிக்கிற படம். சினிமாவில் இப்படித்தான் எதிர்பார்ப்பார்கள். இதற்கு நிறைய உதாரணங்களை சொல்லலாம். யார் அந்த ஹீரோ என்று சொல்ல மாட்டேன்.
இதே மாதிரி தான் நான் என் மகனைக் கூட ப்ரொமோட் பண்ணேன். விஜயை அறிமுகப்படுத்தும்போது அதாவது 1992 ஆம் வருடம். மிகப்பெரிய இயக்குனராக இருந்தேன். ஹிந்தி படம் தமிழ் படம் என பல படங்களை இயக்கி ஒரு பெரிய இயக்குனராக இருந்த காலம். வருமானம் போதிய அளவு வந்து கொண்டு இருந்தது.
அந்த படத்திற்கு பெரிய இசையமைப்பாளரை போட்டிருக்கலாம். பெரிய கேமிரா மேனை போட்டு இருக்கலாம். ஆனால் அந்தப் படத்திற்கு புது கேமிராமேன், புது இசையமைப்பாளர் இவர்களை வைத்துதான் அந்தப் படத்தை நான் எடுத்தேன். இதற்கு என்ன காரணம் என்றால் அந்தப் படம் வெற்றி அடைந்தால் முழுக்க முழுக்க அது ஹீரோ படமாக மாறும்.
விஜயின் படங்கள்; இப்படித்தான் நீங்கள் முதல் விஜயின் 10 படங்களை பாருங்கள். இப்படித்தான் இருக்கும். பெரிய பெரிய டெக்னீசியன்கள் இருக்க மாட்டார்கள். இதுதான் ப்ரோமோஷனின் யுத்தி. ஒரு ஹீரோவை வெளிக்கொண்டுவரும் யுத்தி. கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஹீரோவால படம் ஓடியது என்று சொல்லும்போது தான் அந்த ஹீரோவுக்கு மதிப்பு. இப்படித்தான் ஒரு ஹீரோவை உருவாக்க வேண்டும். ஹீரோவை உருவாக்குவது என்பது சாதாரண விஷயம் கிடையாது என எஸ்.ஏ. சி அந்த விழா மேடையில் கூறினார்.