‘விடாமுயற்சி’யை நம்பி இத டீலில் விட்ராதீங்க.. சாய்பல்லவின் அடுத்த ருத்ரதாண்டவம்
ரசிகர்களை ஈர்த்த சாய்: அமரன் திரைப்படத்திற்கு முன்பே சாய் பல்லவி மீது ரசிகர்களுக்கு ஒரு தனி கிரேஸ் இருக்கத்தான் செய்தது. ஆனால் அமரன் திரைப்படத்திற்கு பிறகு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் சாய் பல்லவியின் பக்கம் சாய்ந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். முதலில் மலர் டீச்சர் மலர் டீச்சர் என அழைத்து வந்த சாய் பல்லவியை இப்போது இந்து ரெபக்கா வர்க்கீஸ் என்று தான் அவரை அழைத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு அமரன் திரைப்படத்தில் அவருடைய நடிப்பு அனைவரையும் பெரும் தாக்கத்திற்கு ஆளாக்கியது.
கிளாமருக்கு நோ: கணவன் மனைவிக்குள் இருக்கும் அந்த ரொமான்ஸ் கணவனுக்காக மனைவி செய்யும் தியாகம் ,காதல் என அத்தனையுமே தன்னுடைய நடிப்பின் மூலம் அழகாக காட்டியிருப்பார் சாய் பல்லவி. கிளாமர் காட்டினால்தான் வாய்ப்பு கிடைக்கும் என இன்று முன்னணி நடிகைகளாக இருக்கும் பல பேர் கிளாமர் வெளிப்படுத்தி டாப் நடிகைகளாக மாறி இருக்கிறார்கள் .
அடுத்த அவதாரம்: ஆனால் எந்த படத்திலும் கிளாமர் காட்டாமல் தன்னுடைய இயல்பான தோற்றத்தின் மூலம் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இன்று அனைவருக்குமே பிடித்த ஒரு நடிகையாக மாறி இருக்கிறார் சாய் பல்லவி. இந்த நிலையில் இவருடைய நடிப்பில் தண்டேல் என்ற திரைப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது. இந்த படத்திலும் அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது.
உண்மை சம்பவம்: இதுவும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். மீனவரான தன்னுடைய கணவன் எல்லையைத் தாண்டி செல்ல அங்குள்ள ராணுவம் சாய்பல்லவியின் கணவரை பிடித்து வைக்க ஒரு தனி மனுசியாக கணவனை மீட்டெடுக்க அவர் படும் வலி, வேதனை ,போராட்டம் இதைப் பற்றி விளக்கும் திரைப்படமாகத் தான் இந்த தண்டேல் திரைப்படம் அமைந்திருக்கிறதாம்.
அப்போது அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் தான் இந்த சம்பவத்திற்கு முக்கிய ஆதாரம். அதனால் அவருடைய ஈடுபாடும் இந்த படத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக மறைந்த சுஷ்மா சுவராஜின் மகளிடம் அந்த நேரத்தில் என்னென்ன விஷயங்கள் நடந்தது என்பதை கேட்டு அறிந்து அது சம்பந்தமான காட்சிகளும் இந்த படத்தில் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதனால் இந்த திரைப்படம் ஒரு ஆகச்சிறந்த திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விடாமுயற்சி திரைப்படம் ரிலீசுக்கு அடுத்த நாள் தண்டேல் திரைப்படம் ரிலீஸ் ஆவதால் விடாமுயற்சி படத்தை பார்த்தவர்களும் தண்டேல் படத்தை பார்த்து விடுங்கள் என படத்தை பார்த்த கோடம்பாக்கத்தினர் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.