டைட்டில் போடும் போதே போரடித்த ஒரே படம் இதுதான்.. இப்படி யாரும் சொன்னதில்ல
டிரெய்லரிலேயே ஆர்வத்தை ஏற்படுத்தும்:
ஒரு சில படங்களை பார்க்கும் பொழுது அதுவும் அந்த படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது இந்த படத்தை எப்பொழுது திரையில் பார்க்க போகிறோம் என்ற ஒரு ஆர்வத்தை நம்மிடையே தூண்டும். அந்த அளவுக்கு ட்ரைலர் கட் என்பது மிக மிக அவசியம். அப்படி ஏராளமான படங்களின் டிரைலர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கின்றன.
சில படங்களின் ட்ரெய்லரை பார்க்கும்பொழுது அந்த படத்தின் இலட்சணம் ட்ரெய்லரையிலேயே தெரியுதே என ரசிகர்கள் அந்தப் படத்தை பார்க்க ஆர்வம் காட்டவே மாட்டார்கள்.ஆனால் இப்பொழுது நாம் பார்க்கும் திரைப்படம் டைட்டில் போடும்போதே போர் அடித்துவிட்டது என்று சொல்லுமளவிற்கு எரிச்சலடைய வைத்த திரைப்படம். அது வேறு எந்த படமும் இல்லை.
இந்தியன் 2:
ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம். உதாரணமாக அந்த ரீல் அந்து போச்சு என்று சொல்வார்கள். அதே ரீலைத்தான் வைத்து ஷங்கர் இந்தியன் 2 என்ற படத்தை எடுத்திருப்பார். குதிரை வர்மம் என்ற பெயரில் குதிரை மாதிரி ஒருவரை ஓட வைத்து எப்படா தியேட்டர் கதவை திறப்பீங்க என்ற மனநிலைமைக்கு ரசிகர்களை ஆளாக்கினார் ஷங்கர்.
டைட்டில் போடும்போது போர் அடித்த ஒரே திரைப்படம் என்றால் அது இந்தியன் 2 திரைப்படம் தான். கமல்ஹாசன் திரை வாழ்க்கையில் இந்த அளவு விமர்சனத்தை தாங்கிய படம் என்றால் அது இந்தியன் 2 திரைப்படம் தான் என ஒரு மூத்த பத்திரிகையாளர் கூறியிருக்கிறார். இதே மாதிரியான ஒரு கதையை தான் இப்போது கேம் சேஞ்சர் திரைப்படத்திலும் கையில் எடுத்திருக்கிறார் போல.
இந்தப் படத்தின் டிரைலரைப் பார்க்கும் பொழுதே கதை தெரிந்து விட்டது. ரமணா, இந்தியன் ,அந்நியன் என எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து ஒரு தெலுங்கு மசாலா படமாக கமர்சியலாக கொடுத்திருக்கிறார். தெலுங்கு ரசிகர்கள் இதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் புஷ்பா 1 ,புஷ்பா 2, புஷ்பா 3 என வரிசையாக தெலுங்கு ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
பெரிய அடி:
ஆனால் தமிழர்கள் இதை எப்படி பார்ப்பார்கள். இந்தியன் 2 படம் மூலமாக ஏற்கனவே ஒரு பெரிய அடி வாங்கி இருக்கிறார் ஷங்கர். அதே கதை, அதே ஃபார்மேட், அதே ட்ரெய்லர் அப்படி மாதிரியான கதையாக தான் இந்த கேம் சேஞ்சர் திரைப்படம் வந்திருக்கும். அதுவும் பொங்கல் அன்று இந்த படம் ரிலீஸ் ஆகுவதால் உண்மையான கேம் சேஞ்சர் ஷங்கராக இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அந்த பத்திரிகையாளர் கூறியிருக்கிறார்.