ஓட்டையை அடைக்கத்தான் இத்தனை நாடகமா? பிரபலங்களின் விவாகரத்து பின்னணி
அதிர்வலைகளை ஏற்படுத்திய விவாகரத்து:
சமீபத்தில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய நிகழ்வு என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்தியை கூறலாம். அதோடு தனுஷ் - ஐஸ்வர்யா சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்ததும். இத்தனைக்கும் விவாகரத்திற்கு முன்னர் ஒரே திரையரங்கில் குடும்பத்துடன் இருவரும் படம் பார்த்து ரசித்தனர்.
இந்தநிலையில் இருவரின் விவாகரத்து பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சொத்து மதிப்பின் அடிப்படையில் பிரபலங்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு, அரசுக்கு வரி கட்டுவது அவசியம். இப்போது உங்களிடம் 1000 கோடி ரூபாய் சொத்து இருந்தால், அதற்கு அரசாங்கத்திற்கு வரியாக மட்டும் 300 கோடி ரூபாய் அளிக்க வேண்டும்.
வருடாவருடம் இந்த வரியை நீங்கள் செலுத்தி தான் ஆக வேண்டும். இப்படி சொத்தில் பாதியை வரியாக கட்டுவதற்கு பதிலாக சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி வரியை கட்டாமல் எஸ்கேப் ஆனால் லாபம் தானே. அது எப்படி முடியும் என்கிறீர்களா? உங்கள் மனைவியை வெளிப்படையாக விவாகரத்து செய்வதாக அறிவித்து ஜீவனாம்சமாக உங்கள் மொத்த சொத்தையும் அவருக்கு அளித்து, அரசாங்கத்திற்கு நஷ்டக்கணக்கு காட்டி விட்டால்?
வரி செலுத்த தேவையில்லை:
இப்படி செய்தால் அதற்கு ஒரு ரூபாய் கூட நீங்கள் வரி செலுத்த தேவையில்லை. இதை மனதில் வைத்துத்தான் இசைப்புயல், சூப்பர்ஸ்டார் மருமகன் இருவரும் இப்படி செய்திருப்பதாக தெரிகிறது. வெளிப்பார்வைக்கு சண்டை கோழிகள் போல இருந்தாலும் உள்ளுக்குள் அவர்கள் குடும்பமாக குதூகலமாகத் தான் உள்ளனர். இது தெரியாமல் நாம் தான் இருவரும் பிரிந்து விட்டார்களே என நம்முடைய பொன்னான நேரத்தை வீணடித்து கொள்கிறோம்.
இதற்குதான் வள்ளுவர் 'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என அன்றே கணித்துக் கூறியிருக்கிறார். எனவே இனிமேலும் இதுபோல செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எல்லாம் நாடகம் என்பதை உணர்ந்து கொள்வது உடல், உள்ளம் இரண்டுக்குமே நல்லது.