விஜய் படத்திற்கு முட்டுக்கட்டை போடும் பிரபல தயாரிப்பாளர்… லியோ படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?

விஜய் தற்போது "லியோ" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ போன்ற பலரும் நடித்து வருகின்றனர். "லியோ" திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளிவருகிறது. லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய "விக்ரம்" திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்ததால் ரசிகர்கள் "லியோ" […]

;

Published On 2023-05-06 14:07 IST   |   Updated On 2023-05-06 14:07:00 IST

விஜய் தற்போது "லியோ" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.

"லியோ" திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளிவருகிறது. லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய "விக்ரம்" திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்ததால் ரசிகர்கள் "லியோ" திரைப்படத்திற்காக மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் "லியோ" திரைப்படத்திற்கு தற்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளதாம். அது என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

கேரளாவில் மிகப்பெரிய தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் திகழ்ந்து வருபவர் லிஸ்டின். இவர் தமிழ் படங்கள் பலவற்றை வாங்கி கேரளாவில் வெளியிட்டு வருகிறார். விஜய்க்கு கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. ஆதலால் விஜய் திரைப்படங்கள் கேரளாவில் ஹிட் அடிக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும் விஜய்யின் "பிகில்", "மாஸ்டர்", "பீஸ்ட்" போன்ற திரைப்படங்களை கேரளாவில் வெளியிட்டவர் லிஸ்டின்தான்.

இந்த நிலையில் லிஸ்டின், "லியோ" திரைப்படம் வெளியாகும் நாள் அன்று அத்திரைப்படத்திற்கு போட்டியாக பிரித்விராஜின் "ஆடுஜீவிதம்" திரைப்படத்தை வெளியிடப்போவதாக முடிவெடுத்துள்ளாராம். இதனால் கேரளாவில் "லியோ" திரைப்படத்திற்கு திரையரங்குகளில் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.

எனினும் இதற்கு முன் லிஸ்டின் "பீஸ்ட்" திரைப்படம் வெளிவரும்போது தான் கேரளாவில் மிகப்பெரிய நடிகரின் படத்தை அதே நாளில் வெளியிடவுள்ளதாக கூறி பீதியை கிளப்பினாராம். எனினும் "பீஸ்ட்" திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை லிஸ்டினிடம் கொடுத்தபிறகு அந்த முடிவில் இருந்து பின் வாங்கிவிட்டாராம்.

இதையும் படிங்க: உதவி செஞ்சது தப்பா?.. என்கிட்டயே வேலையே காட்டிட்டாங்க!.. புலம்பும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை.

Tags:    

Similar News