மாயா, பூர்ணிமாவை கிழித்து தொங்கவிட்ட சுரேஷ் தாத்தா!.. அட பின்னாடி தட்டோட நிக்கிறது யாருன்னு பாருங்க!..

பிக் பாஸ் வீட்டில் இருந்து பெண்கள் பாதுகாப்புக்கு அருகதையற்றவர் என பட்டம் கட்டி வெளியே துரத்தி அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனி சுரேஷ் சக்கரவர்த்தி வீடியோவில் செம ஜாலியாக கையில் தட்டுடன் சாப்பிட்டுக் கொண்டே செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ஆனாலே, அடுத்து சில மாதங்களில் அவர்கள் எங்கே செல்வார்கள் என தெரியாத அளவுக்கு காணாமல் போய் விடுவார்கள். கமல் பிரச்சாரத்திற்கு செல்லும் போதெல்லாம் ஆரி அர்ஜுனன் குரல் அப்படி ஒலித்தது. […]

By :  Saranya M
Update: 2023-11-14 22:00 GMT

பிக் பாஸ் வீட்டில் இருந்து பெண்கள் பாதுகாப்புக்கு அருகதையற்றவர் என பட்டம் கட்டி வெளியே துரத்தி அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனி சுரேஷ் சக்கரவர்த்தி வீடியோவில் செம ஜாலியாக கையில் தட்டுடன் சாப்பிட்டுக் கொண்டே செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ஆனாலே, அடுத்து சில மாதங்களில் அவர்கள் எங்கே செல்வார்கள் என தெரியாத அளவுக்கு காணாமல் போய் விடுவார்கள். கமல் பிரச்சாரத்திற்கு செல்லும் போதெல்லாம் ஆரி அர்ஜுனன் குரல் அப்படி ஒலித்தது. பிக் பாஸ் வீட்டுக்குள் பல படங்களின் போஸ்டர்கள், டீசர்கள் என பகவான் ஆரி அர்ஜுனன் வெளியிட்டார்.

இதையும் படிங்க: விசித்ரா ஆடுறது சுயநல ஆட்டம்!.. அவங்க அர்ச்சனாவை பொத்தி வைக்கிறதே அதுக்குத்தான்.. வனிதா ஆவேசம்!..

ஆனால், 4வது சீசன் முடித்து 7வது சீசன் வந்தும் மனுஷன் ஹீரோவாக நடித்த ஒரு படமும் வெளியாகவில்லை. முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ், மக்கள் மனதை அதிகம் கொள்ளை கொண்ட ஓவியா, சில படங்களில் நடித்த லாஸ்லியா, பிக் பாஸ் டைட்டிலை வென்ற பெண் போட்டியாளர் ரித்விகா மற்றும் போன சீசன் டைட்டில் வின்னர் அசீம் என பலரும் இப்போ என்ன செய்றாங்க என்றே பெரிதாக தெரியாத அளவுக்கு ஆள் அட்ரஸே தெரியாமல் போய் விட்டனர்.

இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப் ஆண்டனியை மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா, ரவீனா தாஹா உள்ளிட்ட புல்லி கேங் டார்கெட் செய்து கமலை வைத்து கேம் ஆடியதில் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: என்னால விஜய்கிட்ட போய் பிச்சைலாம் எடுக்க முடியாது!… கொந்தளிக்கும் பிரபல தயாரிப்பாளர்…

இந்நிலையில், வெளியே போனால் பிரதீப் ரசிகர்களால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என மாயா பண்ண காமெடியையும் அதற்கு அவன் எல்லாம் ஒரு வெத்து வேட்டு என பூர்ணிமா சொன்னதையும் வைத்து தனது வீடியோவில் சுரேஷ் சக்கரவர்த்தி கிழித்துத் தொங்க விட்ட வீடியோவில் சாப்பிட்டுக் கொண்டே பிரதீப் ஆண்டனி பின்னாடி நடந்து செல்வதை பார்த்த ரசிகர்கள் வெளியே வந்து மனுஷன் ஜாலியா இருக்கான் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News