சமுத்திரகனி எடுத்த படங்களா இது.?! மனுஷன் அதுனால தான் மறுபடியும் உதவி இயக்குனரா போய்ட்டாரா.?!

சமுத்திரக்கனியை ஓர் இயக்குனராக நடிகராக தற்காலத்தில் உள்ள சினிமா ரசிகனுக்கு நன்றாக தெரியும். பலர் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய முதல் திரைப்படம் நாடோடிகள் தான் என கூறுவார்கள். ஏனென்றால் அந்த படம்தான் சமுத்திரக்கனி இயக்கத்தில் சூப்பர் ஹிட்டானது. ஆனால், சமுத்திரக்கனி அதற்கு முன்பே இரண்டு படங்களை இயக்கி முடித்துள்ளார். முதல் படம் வெங்கட் பிரபு நடித்துள்ள உன்னை சரணடைந்தேன் திரைப்படம். அந்தத் திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும் படம் படுதோல்வி அடைந்தது. அதுக்கு அடுத்த […]

;

By :  Manikandan
Published On 2022-03-03 12:57 IST   |   Updated On 2022-03-03 12:57:00 IST

சமுத்திரக்கனியை ஓர் இயக்குனராக நடிகராக தற்காலத்தில் உள்ள சினிமா ரசிகனுக்கு நன்றாக தெரியும். பலர் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய முதல் திரைப்படம் நாடோடிகள் தான் என கூறுவார்கள். ஏனென்றால் அந்த படம்தான் சமுத்திரக்கனி இயக்கத்தில் சூப்பர் ஹிட்டானது.

ஆனால், சமுத்திரக்கனி அதற்கு முன்பே இரண்டு படங்களை இயக்கி முடித்துள்ளார். முதல் படம் வெங்கட் பிரபு நடித்துள்ள உன்னை சரணடைந்தேன் திரைப்படம். அந்தத் திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும் படம் படுதோல்வி அடைந்தது.

அதுக்கு அடுத்த திரைப்படம் விஜயகாந்த் நடிப்பில் வெளியான நெறஞ்ச மனசு. இந்த திரைப்படமும் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் தோல்வியை தழுவியது.

இதையும் படியுங்களேன் - சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இது சுத்தமா பிடிக்காது.! மறந்து கூட இத சொல்லிடாதீங்க.!

அதன் பிறகு, தான் இன்னும் சினிமாவில் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று சமுத்திரக்கனி, இயக்குனர் அமீரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். அப்போது அமீர் பருத்திவீரன் இயக்கி கொண்டிருந்தார். உடனே அவரிடம் சென்று உதவி இயக்குனராக சேர்ந்து விட்டார் இயக்குனர் சமுத்திரக்கனி.

இயக்குனர் அமீர் முதலில் மறுத்துள்ளார். நீங்கள் 2 படம் இயக்கி விட்டீர்கள் என்று கூறி மறுத்துள்ளார். ஆனால், சமுத்திரகனி நான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டி உள்ளது. அதனால் நான் இந்த படத்தின் உதவி இயக்குனராக வேலை செய்கிறேன் என்று வேலை பார்த்து, பருத்திவீரன் படம் முடிந்த பிறகே நாடோடிகள் படத்தின் கதையை எழுதி அதனை சூப்பர் ஹிட் படமாக்கி வெற்றிப்பட இயக்குநராகிவிட்டார் இயக்குனர் சமுத்திரகனி.

Tags:    

Similar News