Gossip: சுள்ளான் நடிகர் பேட்டி கொடுப்பதை நிறுத்த இதான் காரணம்… அதான் சத்தம் அதிகமா இருக்கா?

By :  AKHILAN
Published On 2025-06-17 14:28 IST   |   Updated On 2025-06-17 14:28:00 IST

Gossip: தமிழ் சினிமாவின் சுள்ளான் நடிகர் தன்னுடைய பணக்கார பட நிகழ்ச்சியில் பேசி இருக்கும் விஷயம் வைரலாகி வரும் நிலையில் அவரைக் குறித்த இன்னொரு அதிர்ச்சி சம்பவம் தற்போது கசிந்து வருகிறது.

முதல் படத்தில் இவர் எல்லாம் ஒரு நடிகரா என்ற கேள்வியை தற்போது இவர் தான் நடிகர் என மாற்றும் அளவுக்கு தன்னுடைய உழைப்பை போட்டு நடித்தவர் சுள்ளான் நடிகர். தமிழ் சினிமாவின் மற்ற முன்னணி நடிகர்கள் தொடக்கூட முடியாத எல்லையை வரையும் தொட்டு வந்தவர்.

தன்னுடைய சினிமா காரியங்களில் மிக உயரத்தில் இருந்தாலும் அவருடைய இமேஜ் ஒவ்வொரு வகையிலும் சமூக வலைதளத்தில் தவறாக அடிபட்டு வருவது தான் உண்மை. பிரபலங்களின் தொடர் விவாகரத்திற்கு இவர்தான் காரணம் என பலரும் கிசுகிசு வருவது வழக்கம்.

ஆனால் அதற்கெல்லாம் அவர் பெரிய அளவில் பதில் சொல்லாமல் தவிர்த்து வருகிறார். சில ஆண்டுகள் முன்னர் சுள்ளான் நடிகர் தன்னுடைய எல்லா படத்திற்கும் பேட்டி கொடுப்பதை ப்ரோமோஷன்களில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். 

 

பொதுவாக தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு தேவையான எல்லாவற்றையும் இறங்கி செய்து வந்தவர் சுள்ளான் நடிகர். ஆனால் தற்போது வெளிவரும் எந்த படத்திற்கும் அவர் பேட்டி கொடுக்காமல் தவிர்த்து வருகிறார்.

பொது மேடைகளில் தோன்றும்போது மட்டும் தன்னுடைய ஆவேசமான பேச்சுகளால் வைரலாக்கி விடுகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த பணக்கார படத்தின் நிகழ்ச்சியில் பேசிய சுள்ளான் நடிகர், என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கோங்க.

என்கிட்ட இந்த சர்க்கஸெல்லாம் வேண்டாம். என்னுடைய வழித்துணைகள் இருக்காங்க. மத்தவங்க என்னை பத்தி பேசும்போது எனக்காக இருக்காங்க. நீங்க போதும் தைரியமா போங்க. சந்தோஷத்தை வெளியில் தேடாதீங்க. எல்லாம் உங்களுக்கு உள்ளேயே இருக்கு எனப் பேசி இருப்பார்.

இத்தனை ஆவேசமாக பேசிய சுள்ளான் நடிகர் தனி பேட்டி கொடுப்பதற்கு மருத்துவ வருகிறார். சில வருடம் முன்னர் தமிழ் சினிமாவின் பிரபலங்களின் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியான லீக்ஸ் விவகாரம் தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

வேலையில்லா படத்தின் ஒரு பேட்டியில் தமிழ் சினிமாவின் லீக்ஸ், இவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பட்டது. அப்போது அதற்கு பதில் சொல்ல நான் விருப்பப்படவில்லை என சுள்ளான் நடிகர் பேசி இருந்தால் அதை தொடர்ந்து பேட்டி கொடுப்பதையே தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News