Gossip: இரண்டு எழுத்து நடிகருக்கு மீண்டும் தூண்டில் போடும் மனைவி… என்ன மேட்டர் தெரியுமா?
Gossip: கோலிவுட்டில் விவாகரத்து தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் விவாகரத்து அறிவித்த இரண்டு எழுத்து நடிகரின் மனைவி கணவனை பிரிய முடியாது என விடாப்பிடியாக இருப்பதாக தகவல்கள் கசந்து இருக்கிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த இரண்டெழுத்து நடிகர் சமீபத்தில் தன்னுடைய மனைவியை பிரிவதாக அறிவித்தார். பொதுவாக இப்படி விவாகரத்து அறிவிப்பு வரும்போது இரண்டு தரப்புமே ஒரே அறிக்கையை வெளியிட்டு பெயர்களை மட்டும் மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால் முதல் முறையாக தமிழ் சினிமாவில் இரண்டெழுத்து நடிகர் தன்னுடைய விவாகரத்தை அறிவிக்க அடுத்த நாளே மனைவி தனக்கு இந்த விவாகரத்தில் சம்மதம் இல்லை. கணவர் தன்னிடம் கேட்காமல் இதை அறிவித்திருக்கிறார். அவரை பார்க்க கூட யாரும் என்னை அனுமதிப்பதில்லை என பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்தார்.
இதை தொடர்ந்து இரண்டெழுத்து நடிகர் தன்னை மனைவியின் குடும்பம் நாயை விட கேவலமாக நடத்துவதாக ஓப்பனாக மீடியாக்களில் சொல்ல தொடங்கினார். இதை தொடர்ந்து மனைவி தரப்பு சற்று அமைதி காத்தது. வழக்கு நீதிமன்ற படி ஏறியது.
எப்போதும் போல இது இரு தரப்பு சம்பந்தத்துடன் இல்லாமல் இரண்டெழுத்து நடிகர் மட்டுமே விவாகரத்து கேட்பதால் தொடர்ச்சியாக மத்தியஸ்தம் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர மீண்டும் மத்தியஸ்தம் நடந்ததாக கூறப்படுகிறது.
இரண்டெழுத்து நடிகர் இனிமேல் தன்னால் சம்பாதித்ததை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்ற முடிவுடன் விவாகரத்து தான் ஒரே முடிவு என விடாப்பிடியாக இருக்கிறாராம். ஆனால் அவருடைய மனைவி தரப்பு எப்படியாவது நடிகரை சமாதானம் செய்து மீண்டும் இணைந்து விட பல வழிகள் முயன்று வருவதாக கூறப்படுகிறது.